மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ஆராய்ச்சிக்கான உலகளாவிய அங்கீகாரம்: ஹரியானா ஹிசாரில் உள்ள ICAR-NRC, மதிப்புமிக்க ஆய்வக அந்தஸ்தைப் பெற்றுள்ளது

Posted On: 08 NOV 2024 5:46PM by PIB Chennai

இந்தியாவின் கால்நடை சுகாதாரத் துறையின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்  துறை (DAHD), ஹிசாரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-குதிரைகள் குறித்த தேசிய ஆராய்ச்சி மையத்தை, உலக விலங்கு சுகாதார அமைப்பாக அங்கீகரித்துள்ளது குதிரை பைரோபிளாஸ்மோசிஸிற்கான பரிந்துரை ஆய்வகமாக இதனை நியமிக்க உதவியுள்ளது.இந்த உலகளாவிய அங்கீகாரம், இந்தியாவின் அறிவியல் திறன்கள், கண்டறியும் உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான விலங்கு சுகாதார சவால்களைச் சமாளிப்பதில் தலைமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நீடித்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 0.55 மில்லியன் குதிரைகள் (குதிரைகள், மட்டக்குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள்) உள்ளன, அவை பல்வேறு வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. இந்த எண்ணிக்கையில் சுமார் 0.34 மில்லியன் குதிரைகள் மற்றும் மட்டக்குதிரைகள், 0.12 மில்லியன் கழுதைகள் மற்றும் 0.08 மில்லியன் கோவேறு கழுதைகள் உள்ளன, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இதில் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளன. இந்த ஆய்வக நிலை ஆராய்ச்சி மற்றும் நோயறிதலில் மிக உயர்ந்த சர்வதேச தரங்களை இந்தியா கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய விலங்கு ஆரோக்கியத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் வலுப்படுத்துகிறது. தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் இப்போது சர்வதேச ஒத்துழைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும், மேம்பட்ட கண்டறியும் சேவைகளை வழங்குதல், தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்தல் மற்றும் குதிரை பைரோபிளாஸ்மோசிஸ் குறித்த முன்னணி ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஐ.சி.ஏ.ஆர்-என்.ஆர்.சியை இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக அந்தஸ்தைப் பெற்ற நான்காவது ஆய்வகமாக ஆக்குகிறது, இது ICAR - போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்துடன் (பறவைக் காய்ச்சல்) இணைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2071817

***

PKV/AG/DL


(Release ID: 2071844) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi