ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இயக்க சிறப்பு முகாம் 4.0-ஐ ஊரக வளர்ச்சித் துறை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 08 NOV 2024 12:40PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் அக்டோபர் 2 முதல்  அக்டோபர் 31 வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகள், மாநில குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, மேல்முறையீடு மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை விவகாரங்கள் இதில் அடங்கும்.

சிறப்பு இயக்கத்தின் முடிவில், ஒரு பிரதமர் அலுவலக குறிப்பு (100%), 14 மாநில குறிப்புகள் (100%), 2 அமைச்சகங்களுக்கு இடையிலான விஷயங்கள் (100%), 707 பொது குறை தீர்ப்பு மேல்முறையீடுகள் (100%), 75 எம்.பி.கள் குறிப்புகளில் 72 (96%) மற்றும் பொதுமக்கள் குறைகள்  1401-ல் 1301 (93%)-க்கு  தீர்வு காணப்பட்டது.

சிறப்பு முகாமின் போது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 4681 நேரடி கோப்புகள் மற்றும் 2410 மின்னணு கோப்புகளையும் துறை ஆய்வு செய்தது. 1869 நேரடி கோப்புகளும், 230 மின்னணுக் கோப்புகளும் முடித்துவைக்கப்பட்டன. ஸ்கிராப் / மின்னணு கழிவுகளை அகற்றியதன் மூலம் மொத்தம் ரூ.7.81 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பிரச்சார காலத்தில் கிருஷி பவனில் சுமார் 400 சதுர அடி தரை பகுதி விடுவிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் சிரமதானத்தைக் கொண்டு 3 வெளிப்புற தூய்மை முகாம்களையும் இத்துறை நடத்தியது. தினசரி முன்னேற்றம் ஒரு பிரத்யேக குழுவால் கண்காணிக்கப்பட்டு, முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக சிறப்பு இயக்கத்தின் கீழ் முயற்சிகள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டன. அலுவலக இடவசதியைக் குறைத்தல், பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அலுவலக அறைகளைப் பராமரித்தல் ஆகிய இலக்குகளை இத்துறை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை தனது அலுவலகங்களில் நிலுவையிலுள்ள பணிகளை குறைத்தல் மற்றும் தூய்மை குறித்த சிறப்பு முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் பெரும்பாலானவற்றை எய்தியுள்ளது.

***

(Release ID: 2071703)

PKV/AG/KR


(Release ID: 2071717) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi