நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நித்தி ஆயோக்கில் சிறப்பு இயக்கம் 4.0 செயல்படுத்துதல்

Posted On: 08 NOV 2024 10:56AM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் அரசிடம்  நிலுவையிலுள்ள நாட்களைக் குறைத்தல் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் நோக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று, நித்தி ஆயோக் சிறப்பு இயக்கம் 4.0 (செயல்படுத்தல் கட்டம்) 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நிலுவையில் உள்ள பகுதிகளை அகற்றுதல், சிறந்த இட மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் அரசு உள்கட்டமைப்புகளை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு உத்வேகத்துடன் தொடங்கியது.

இந்த விரிவான இயக்கம் இரண்டு தனித்துவமான கட்டங்களை விரிவுபடுத்தியதுடன் திறமையான ஆளுகை மற்றும் பொதுச் சேவைக்கான எங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது:

ஆயத்த கட்டம் (2024 செப்டம்பர் 16 முதல் 30 வரை) இந்த ஆயத்த கட்டத்தில், நித்தி ஆயோக் 10389 கோப்புகளை ஆய்வு செய்ய அடையாளம் கண்டுள்ளது, நிலுவையில் உள்ள 5 பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், 12 நாடாளுமன்ற உத்தரவாதங்கள், 1 பிரதமர் அலுவலக குறிப்பு, 1 மாநில அரசு குறிப்பு மற்றும் தூய்மை மற்றும் மேம்பட்ட இட மேலாண்மைக்கான அலுவலக இடங்கள், இவை அனைத்தும் 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்பு இயக்கம் 3.0-ன் போது அகற்றப்படுவதற்கு தயாராக உள்ளன. 2024.

செயல்பாட்டு கட்டம் (2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31) அடுத்த கட்டமாக, நித்தி ஆயோக் நிலுவையில் உள்ள 5 பொதுமக்கள் குறை தீர்க்கும் மனுக்களில் 100%, பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில அரசு குறிப்புகள் தலா 1 மற்றும் 3 நாடாளுமன்ற உத்தரவாதங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொத்தம் 10389 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 720 கோப்புகள், களையெடுக்க அடையாளம் காணப்பட்டன. மேலும், அலுவலக வளாகம், வெளிப்புற வளாகம், ஆவண அறை மற்றும் துறை கேண்டீன் ஆகியவற்றில் தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏறத்தாழ 1956 சதுர அடி இடம் கோப்புகளை அகற்றுதல் மற்றும் அலுவலக இட மேலாண்மையில் மேம்பாடுகள் மூலம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இது சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பங்களித்தது.

2024 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 வரை நித்தி ஆயோக்கில் நடைபெற்ற தூய்மையே சேவை இயக்கம் 2024 மூலம் இந்த இயக்கம் பொருத்தமாக விரிவுபடுத்தப்பட்டது, இதில், துறை பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நித்தி ஆயோக்கில் உள்ள ஆவண அறையை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கோப்புகளை ஆய்வு செய்தல், பழைய ஆவணங்களை களையெடுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பழைய ஆவணங்களை அப்புறப்படுத்துதல்

நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் / ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தூய்மை விழிப்புணர்வு இயக்கம்

நிதி ஆயோக் அலுவலக வளாகத்தில் தூய்மை இயக்கம்

நிதி ஆயோக் துறை கேண்டீனை ஆழமாக சுத்தம் செய்தல்

நித்தி ஆயோக் துணைத் தலைவர், ஊழியர்களுக்கு தூய்மை உறுதிமொழியை செய்து வைத்தார். நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் (திரு சுமன் கே. பெரி) தலைமையில் நித்தி ஆயோக் வெளிப்புற வளாகத்தின் தூய்மை இயக்கம், நித்தி ஆயோக்கின் உறுப்பினர்கள் (திரு ரமேஷ் சந்த்), மற்றும் நித்தி ஆயோக்கின் உறுப்பினர்கள் (திரு அரவிந்த் விர்மானி) உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

*****

 

(Release ID: 2071666)

MM/KPG/KR




(Release ID: 2071714) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Manipuri