விவசாயத்துறை அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0-ல் கடைசி வாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்
Posted On:
07 NOV 2024 7:24PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கப்பட்டது. சிறப்பு இயக்கம் 4.0 வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உட்பட மத்திய அரசின் அனைத்து துறைகள், அவற்றின் 270 சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகங்கள், கள அலுவலகங்கள் மற்றும் இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கொண்டாடப்பட்டது.
1791 இடங்களில் தூய்மைப் பணி இயக்கங்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் அப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில் 24 குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் இருந்த 22 ஆயிரத்து 295 பொதுமக்களின் குறைகளில் 22 ஆயிரத்து 269 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 698 பொதுமக்களின் மேல் முறையீட்டு மனுக்களில் 516 முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071596
***
IR/RS/DL
(Release ID: 2071604)
Visitor Counter : 21