எஃகுத்துறை அமைச்சகம்
நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ எஃகு அமைச்சகம் நிறைவு செய்தது
Posted On:
07 NOV 2024 5:46PM by PIB Chennai
எஃகு அமைச்சகம், மத்திய பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து, நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் (SCDPM) 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) குறிப்புகள், பிரதமர் அலுவலக (பி.எம்.ஓ) குறிப்புகள், வி.ஐ.பி மற்றும் அமைச்சரவை குறிப்புகள், மாநில அரசு குறிப்புகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் பிற முக்கிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிலுவையில் உள்ள குறிப்புகளை முறையாக நிவர்த்தி செய்து அகற்றுவதை எஸ்.சி.டி.பி.எம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எஸ்.சி.டி.பி.எம் 4.0-ன் கீழ் எஃகு அமைச்சகத்தின் செயல்திறன் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் 100% குறிப்புகளுக்கு பதிலளிக்கப்பட்டிருப்பதுடன், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுமக்களின் அனைத்து குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன / முடித்து வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 25380 நேரடி கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எஃகு அமைச்சகம் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களால் 400 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
***
MM/AG/DL
(Release ID: 2071561)
Visitor Counter : 40