புவி அறிவியல் அமைச்சகம்
புவி அறிவியல் அமைச்சகத்தில் சர்வதேச கடற்படுகை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்
Posted On:
07 NOV 2024 4:47PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்; நவம்பர் 06, 2024 அன்று புதுதில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், சர்வதேச கடற்படுகை ஆணையத்தால் (ISA) பரிந்துரைக்கப்பட்ட 21 பயிற்சியாளர்களை பாராட்டினார். பாலிமெட்டாலிக் முடிச்சுகள் (PMN) மற்றும் பாலிமெட்டாலிக் சல்பைடுகள் (PMS) ஆகியவற்றின் ஆழ்கடல் கனிம ஆய்வு குறித்து, செப்டம்பர் 2024 முதல் மத்திய புவி அறிவியல் துறை நிறுவனங்களில் இரண்டு மாத பயிற்சியை விண்ணப்பதாரர்கள் முடித்தனர். இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் கனிம ஆய்வுக்காக சர்வதேச சூரியசக்தி கூட்டணியுடன் இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி, வளரும் நாடுகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஜிதேந்திர சிங், பாராட்டப்பட்ட பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பாதுகாப்பு முயற்சிகள், நிலையான ஆய்வு மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் முன்னேற்றத்திற்கும் அழைப்பு விடுத்தார். வலுவான விதிமுறைகளை உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் மிகவும் செயல்திறன் மிக்க அணுகுமுறையின் அவசியத்தையும் அவர் விவாதித்தார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரம், பங்கேற்பாளர்களை வாழ்த்தியதோடு, அமைச்சக நிறுவனங்களின் வெற்றிகரமான முடிவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தேசிய கடல்வளத் தொழில்நுட்ப கழகம் (என்ஐஓடி) மற்றும் கோவாவின் கடல்வளம் மற்றும் துருவ ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்சிபிஓஆர்) ஆகிய இரண்டு தன்னாட்சி நிறுவனங்களால் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டன. கென்யா, இலங்கை, தான்சானியா, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு என்.ஐ.ஓ.டி.பி.எம்.என் குறித்த கடலில்பயிற்சியை நடத்தியது. கானா, மடகாஸ்கர், ஜமைக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து பங்கேற்பாளர்களுக்கு பிஎம்எஸ் குறித்த தரைப்பயிற்சியை என்சிபிஓஆர் நடத்தியது. பங்கேற்பாளர்கள் மற்ற புவி அறிவியல் துறை நிறுவனங்களையும் பார்வையிட்டதன் மூலம் நுண்ணறிவுகளைப் பெற்றனர் (ஹைதராபாத்தில் உள்ள கடல்வள தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்; தேசிய புவி அமைப்பு அறிவியல் மையம், திருவனந்தபுரம்; மற்றும் கடல்வாழ் உயிரின வளங்கள் மற்றும் சூழலியல் மையம், கொச்சி). பயிற்சி திட்டங்களுக்கு சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனங்கள் (தேசிய கடல்சார் நிறுவனம், கோவா மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் மினரல்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, புவனேஸ்வர்) கல்வி ரீதியாக ஆதரவளித்தன.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் கீழ் ஆழ்கடல் படுகை கனிம பிஎம்என் மற்றும் பிஎம்எஸ் ஆய்வு நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் ஒருங்கிணைப்பு முகமையாக புவி அறிவியல் துறை உள்ளது. ஜமைக்காவின் கிங்ஸ்டனை தலைமையிடமாகக் கொண்ட ஐ.எஸ்.ஏ, சர்வதேச கடற்பரப்பில் கனிம தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும்.
புதுதில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சக தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், சர்வதேச கடற்படுகை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சியாளர்களை மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், பாராட்டினார்.
***
MM/AG/DL
(Release ID: 2071540)
Visitor Counter : 29