நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரேசில் நாட்டின் வர்த்தகம், சர்வதேச உறவுகளுக்கான துணைச் செயலாளர், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
Posted On:
07 NOV 2024 4:40PM by PIB Chennai
பிரேசில் நாட்டின் வேளாண் மற்றும் கால்நடைகள் அமைச்சகத்தின் வர்த்தகம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துணைச் செயலாளர் திரு ஜூலியோ சீசர் ராமோஸ் தலைமையிலான குழுவினர், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி காரேவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சமீபத்திய ஆண்டுகளில் உளுந்து விநியோகஸ்தராக பிரேசில் உருவெடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் உளுந்து மற்றும் துவரை இறக்குமதியின் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து இறக்குமதியின் அளவு 2023-ம் ஆண்டில் 4,102 மெட்ரிக் டன்னிலிருந்து 2024-ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 22,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான பருப்பு வகைகளின் வர்த்தகம் தனித்துவமிக்க சாதகமாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் பயிர் பருவங்களில் உள்ள வேறுபாட்டிற்கிடையே, இந்த நாடுகள் இந்தியாவின் பயிர் வாய்ப்பின் அடிப்படையில் தங்கள் பயிர் முறையைத் திட்டமிட அனுமதிக்கிறது. ரபி -2024 உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து 2024 மே மாதத்தில் இந்தியா கொண்டைக்கடலையை வரியில்லாமல் இறக்குமதி செய்வதாக அறிவித்தபோது, ஆஸ்திரேலியாவின் விதைப்பு பருவம் ஒத்துப்போனதால் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதன் அடிப்படையில், நடப்பாண்டில் ஆஸ்திரேலியாவின் கொண்டைக்கடலை உற்பத்தி சுமார் 13.3 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டில் 4.9 லட்சம் டன்னாக இருந்தது. அக்டோபர் கடைசி வாரத்திலிருந்து ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கொண்டைக்கடலையின் அளவு அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் அது போதிய அளவு கிடைக்கச் செய்து, சந்தை விலைக்குறைப்புக்கு உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071516
***
IR/RS/DL
(Release ID: 2071539)