சுரங்கங்கள் அமைச்சகம்
நான்காவது தவணையில் கனிம தொகுதிகளின் வெற்றிகரமான ஏலம்: கனிமத் துறையில் தற்சார்பு இந்தியாவின் முக்கிய மைல்கல்
Posted On:
07 NOV 2024 1:03PM by PIB Chennai
சிக்கலான மற்றும் கேந்திரமான கனிமத் தொகுதிகளின் ஏலத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 8 முக்கியமான கனிமத் தொகுதிகளின் ஏலத்தை சுரங்க அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தச் சாதனை கனிம பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நாட்டின் எரிசக்தி மாற்றம், நிலையான தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய வளங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்ப் பிரதிபலிக்கிறது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட இந்த ஏலம், முக்கிய கனிமங்களுக்கு சலுகைகளை வழங்க மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மின்னணுவியல், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியமான தாதுக்களின் நிலையான விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உத்தியில் இது ஒரு முக்கிய படியாகும்.
2024 ஜூன் 24, அன்று 21 கனிம தொகுதிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. தொழில்நுட்ப ஏலங்களின் மதிப்பீட்டிற்குப் பிறகு, 10 கனிம தொகுதிகள் மின்னணு ஏலத்தின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின, இதில் மூன்று முதல் முயற்சி தொகுதிகள் மற்றும் ஏழு இரண்டாவது முயற்சி தொகுதிகள் அடங்கும். இந்தத் தொகுதிகளில் உயர் தொழில்நுட்ப மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாடுகளுக்கு அவசியமான பாஸ்போரைட், கிராஃபைட் மற்றும் வனேடியம் போன்ற கனிமங்கள் அடங்கும். 8 வட்டாரங்களுக்கான ஏல செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது, மீதமுள்ள 2 தொகுதிகளுக்கான ஏல செயல்முறை 02.12.2024 க்குள் முடிக்கப்படும்.
நான்காம் கட்டத்தில் வெற்றிகரமான எட்டு தொகுதிகளின் ஏலத்தில் தமிழ்நாட்டின் நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட டஸ்ஸ்டன் கனிமமும் ஒன்றாகும். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் இதை ஏலம் எடுத்தது.
நான்காம் கட்டத்தின் கீழ் 8 முக்கிய கனிம தொகுதிகள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டதன் மூலம், மத்திய அரசால் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்ட அபாயகரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. வெற்றிகரமான ஏல முடிவுகள் இந்தியாவின் சுரங்கத் துறை சீர்திருத்தங்களில் தொழில்துறையினரிடையே வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. முக்கியமான கனிமங்களில் தற்சார்பை அடைவதற்கும், உலகளாவிய கனிம பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு போட்டி நாடாக நிலைநிறுத்துவதற்கும் அரசின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இது அமைந்துள்ளது.
****
(Release ID: 2071441)
PKV/KPG/KR
(Release ID: 2071452)
Visitor Counter : 57