பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0 நிறைவடைந்தது
Posted On:
06 NOV 2024 2:45PM by PIB Chennai
தூய்மையை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகளைக் தீர்த்தல், நேரடி மற்றும் மின்னணு கோப்புகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கான சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டது.
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஓய்வூதியம், ஓய்வூதியதார்கள் நலத்துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து 2024 அக்டோபர் 02 அன்று புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் நடைபெற்ற தூய்மை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
2024 அக்டோபர் 02 அன்று புதுதில்லி நேரு பூங்காவில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீடித்த எதிர்காலத்தை ஊக்குவிப்பதற்கான தூய்மையே சேவை இயக்கம் மற்றும் மரம் நடும் இயக்கத்தில் பொதுநலத்துறை பங்கேற்றது.
திரு ஸ்ரீனிவாஸ், அலுவலக வளாகத்தை ஆய்வு செய்து, 2024 அக்டோபர் 03 அன்று, பழைய ஆவணங்களைக் கழிக்கும் பணியில் பங்கேற்றார்
வாகன நிறுத்துமிடம், லோக் நாயக் பவனின் ஏ &பி பிரிவின் தரை தளம் ஆகியவற்றை விரைவாக தூய்மை செய்தல், நடைபாதைகளை தூய்மை செய்தல் மற்றும் பெரிய பாலிதீன் பைகளில் குப்பைகளை சேகரித்து அப்பகுதியை அழகுபடுத்துதல் உள்ளிட்ட ஒரு மணி நேர தூய்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, 3976 பழைய கோப்புகளில் 1567 கோப்புகள் அகற்றப்பட்டன. 4087 மின்-கோப்புகளில் 1697 கோப்புகள் நிறைவு செய்யப்பட்டன.
----
TS/IR/KPG/KV/DL
(Release ID: 2071246)
Visitor Counter : 14