பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு உற்பத்தித் துறை 1500 இடங்களில் தூய்மை முகாம்களை நடத்தியது
Posted On:
06 NOV 2024 2:43PM by PIB Chennai
பாதுகாப்பு உற்பத்தி துறை, அதன் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்கள் சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் 1500 இடங்களில் தூய்மையைச் செயல்படுத்துவதில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளன. பொதுமக்களின் குறைகள், பிரதமர் அலுவலகம்/நாடாளுமன்ற உறுப்பினர்/விஐபி மற்றும் மாநில அரசு ஆகியோரிடமிருந்து வரும் குறிப்புகள் போன்றவை இந்த இயக்கம் கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளாகும்.
பணியிடங்களில் தூய்மையின் பங்கு மற்றும் செயல்திறனைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தளமாக இந்தப் பிரச்சாரம் செயல்பட்டுள்ளது. மேலும் வளாகத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க ஒரு நிலையான அமைப்பை நிறுவுவதற்கு நிறுவனங்களுக்கு உதவுகிறது. பணியிடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முன்னேற்றத்தைக் கொண்டுவர இந்த அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சிறந்த நடைமுறைகள் பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டன.
தூய்மை இயக்கத்தின் முடிவில், பாதுகாப்பு உற்பத்தித் துறை ஆய்வு செய்த 26,000 கோப்புகளில் 25,000 கோப்புகள் பதிவுகளை களையெடுப்பதற்காக கண்டறியப்பட்டு மதிப்பாய்வு செய்து பிரித்தல் போன்ற மைல்கற்களை அடைந்தது: 8 லட்சம் சதுர அடி இடம், ஸ்கிராப் / பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் விடுவிக்கப்பட்டது; 2675 மெட்ரிக் டன் ஸ்கிராப் / பயன்படுத்தப்படாத பொருட்கள் அகற்றப்பட்டன; கழிவுகளை அகற்றுவதன் மூலம் ரூ.12.36 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 184 பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டன. 123 பொது மக்கள் குறை மேல்முறையீட்டு மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
நாடு தழுவிய இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அவர்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், அவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை மேம்படுத்துவதில் பெரிய சமூகத்தை ஈடுபடுத்தவும் நடைபயிற்சி போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த முயற்சி துப்புரவுத் தொழிலாளர்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டியது. சுகாதார பரிசோதனை முகாம்கள் மூலம் அவர்களின் சுகாதார பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
பிரச்சாரத்தின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கப்பட்டனர், மேலும் வீட்டிலும் பணியிடத்திலும் சுகாதார நடைமுறைகளில் சவால்கள் மற்றும் சாத்தியமான முன்னேற்றங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.
-----
TS/PKV/KV
(Release ID: 2071177)
Visitor Counter : 46