அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய வரலாற்றை வடிவமைப்பதில் பருவநிலையின் பங்கை ஆய்வு கண்டறிந்துள்ளது
Posted On:
05 NOV 2024 4:31PM by PIB Chennai
கடந்த 2000 ஆண்டுகளில் இந்திய துணைக் கண்டத்தில் மனித வரலாற்றை வடிவமைப்பதில் பருவநிலை உந்துதல், தாவர மாற்றங்கள் முக்கிய பங்கு வகித்தன என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எதிர்கால தாக்கங்களை சிறப்பாக கணிக்க வரலாற்று பருவநிலை வடிவங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய கங்கை சமவெளியில் பிற்கால ஹோலோசீன் (சுமார் 2,500 ஆண்டுகள்) பருவநிலை பதிவுகளில், பற்றாக்குறை உள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் கடந்த கால பருவநிலை முறைகளைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி இடைவெளி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பி.எஸ்.ஐ.பி.யின் விஞ்ஞானிகள் வரலாற்று பருவநிலை இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ள தொல்லுயிர் பருவநிலை தடயங்களை ஆராய்ந்தனர்.
கடந்த 2000 ஆண்டுகளின் வரலாற்றில் இந்திய கோடை பருவமழை வடிவங்களை மறுகட்டமைப்பு செய்தனர். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் பருவநிலை மாற்றங்களை அவர்கள் தொடர்புபடுத்தினர்.
மாறிவரும் காலநிலைக்கு மிகவும் பொருத்தமான பயிர்களை அடையாளம் காண்பதன் மூலம், உற்பத்தித்திறனை பராமரிக்கவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் தேவையான விவசாய நடைமுறைகளை மாற்றியமைக்க முடியும். இந்த செயலூக்கமான அணுகுமுறை விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைத் தணிக்கவும், எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவை மாற்றவும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070864
------
TS/PKV/KPG/DL
(Release ID: 2070944)
Visitor Counter : 15