கலாசாரத்துறை அமைச்சகம்
ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024
Posted On:
04 NOV 2024 5:47PM by PIB Chennai
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளின் துடிப்பான கட்டமைப்பைக் கொண்ட இந்தியா, நீண்ட காலமாக புத்த மதத்தின் இதயப்பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பண்டைய பாரம்பரியம் அதன் எல்லைகளுக்குள் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த வளமான பாரம்பரியத்தைக் கொண்டாட, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் (IBC) இணைந்து, முதல் ஆசிய பௌத்த உச்சி மாநாட்டை (ABS) 2024 நவம்பர் 5-6 தேதிகளில் புதுதில்லியில் நடத்துகிறது. ஆசியாவை வலுப்படுத்துவதில் புத்த தம்மத்தின் பங்கு என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கண்டம் முழுவதிலுமிருந்து மதிப்புமிக்க சங்கத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்வார்கள். பௌத்த சமூகம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை ஆராய்வதோடு உரையாடல் மற்றும் புரிதலையும் வளர்த்தெடுக்கும். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொள்கிறார்.
---
TS/MM/KPG/DL
(Release ID: 2070688)
Visitor Counter : 40