கலாசாரத்துறை அமைச்சகம்
'கங்கையை சந்திக்கும் காவேரி 'யின் 2-ம் நாள் நிகழ்வுகள்: அமிர்தப் பாரம்பரியத்தின் கீழ் இந்தியக் கலாச்சார பாரம்பரியத்தின் கண்கவர் விழா
Posted On:
03 NOV 2024 7:00PM by PIB Chennai
பகிரப்பட்ட கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் முயற்சியான அமிர்தப் பாரம்பரியம் என்ற சிறப்பு விழா தொடரை கலாச்சார அமைச்சகம் தொடர்கிறது. நவம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அமிர்தப் பாரம்பரியம் தொடரில் முதலாவதான 'கங்கையை சந்திக்கும் காவேரி ' நிகழ்ச்சி - கடமைப் பாதை, கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம் ஆகியவற்றில் இரண்டாவது நாளில் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்தது. இந்தியாவின் பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைகளை ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.
கலாச்சார அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனங்களான சங்கீத நாடக அகாடமி, கலாக்ஷேத்ரா, கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம் (சி.சி.ஆர்.டி) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா தொடர், வட இந்தியாவில் சிறந்த தென்னிந்திய இசை மற்றும் நடனத்தை ஒன்றிணைக்கிறது. அதே நேரத்தில் வடக்கில் உள்ள கலை மரபுகளையும் கொண்டாடுகிறது. 2024 நவம்பர் 2 முதல் 5 வரை நடைபெறும் 'கங்கையை சந்திக்கும் காவேரி' திட்டம், சென்னையின் மதிப்பிற்குரிய மார்கழி திருவிழாவால் ஈர்ப்பைப் பெற்ற இது, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை, அதன் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கு புகழ் சேர்ப்பதைப் பிரதிபலிக்கிறது.
பாரம்பரிய கலை வடிவங்களுக்கு, குறிப்பாக மறைந்து வரும் கலை வடிவங்களுக்கு, புத்துயிர் அளிப்பதை மையமாகக் கொண்டு இந்தத் தொடரை வழங்குவதில் கலாச்சார அமைச்சகம் பெருமை கொள்கிறது. அதிவேக தொழில்நுட்பம், நவீன விளக்கக்காட்சியின் புதுமையான பயன்பாடு மூலம், அமிர்தப் பாரம்பரியம் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலை பாரம்பரியத்தையும் சர்தார் படேலின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பார்வையையும் கௌரவிக்கிறது. சர்தார் படேலின் 150 வது பிறந்த நாளின் இரண்டு ஆண்டு நினைவுகூரல், கொண்டாட்டங்களுக்கு தேசிய பெருமையில் ஓர் அடுக்கையும் திருவிழாவின் ஒற்றுமை செய்தியுடன் அவரது மரபையும் இணைக்கிறது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் உள்ளார்ந்த பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்திய கலைஞர்களின் வளமான வரிசையுடன் இரண்டாவது நாள் நிகழ்வுகள் இந்தக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தன.
கடமைப் பாதையில், தில்லியைச் சேர்ந்த ஜகதீஷ் பிரகாஷ் குழுவினரின் உற்சாகமான ஷெனாய் இசை நிகழ்ச்சியுடன் மாலைநேர விழா தொடங்கியது. இது இன்றைய கொண்டாட்டங்களுக்கு மேடை அமைத்த மங்களகரமான ஒலிகளால் காற்றை நிரப்பியது. இதைத் தொடர்ந்து, சரஸ்வதி வீணையில் எஸ்.ராதாகிருஷ்ணனும், சரோடில் முகேஷ் சர்மாவும் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவின் பாரம்பரியங்களை இணைத்து ஒரு மயக்கும் இரட்டை இசைக்கருவி நிகழ்வை நடத்தினர். பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இரட்டையர்களான ரஞ்சனி, காயத்ரியின் நேர்த்தியான கர்நாடக குரலிசை நிகழ்ச்சியால்பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. வசந்த் கிரண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கலைஞர்களின் உற்சாகமான குச்சிபுடி நிகழ்ச்சியுடன் மாலை நிகழ்வுகள் நிறைவடைந்தன. பாரம்பரிய நடனத்தின் மூலம் துடிப்பான கதை சொல்லலை இது கொண்டு வந்தது.
அதே நேரத்தில், சி.சி.ஆர்.டி துவாரகாவில் சென்னையைச் சேர்ந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் சிம்பொனி பார்வையாளர்களைக் கவர்ந்தது. இது கர்நாடக இசையின் செழுமையையும் தென்னிந்திய தாள வடிவங்களின் ஆழத்தையும் எடுத்துக்காட்டியது. சிம்பொனியைத் தொடர்ந்து சி.சி.ஆர்.டி.யின் பாரம்பரிய நடனக் குழுவினரான ஸ்ரீ ராகுல் வர்ஷ்னே மற்றும் தில்லியைச் சேர்ந்த டீம் சோச் ஆகியோர் நடன வடிவங்களை இணைத்து இந்தியப் பாரம்பரியத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடினர். சி.சி.ஆர்.டி.யில் மாலை நிகழ்வுகள் சூரியகாயத்ரியின் ஆத்மார்த்தமான பஜனையுடன்நிறைவடைந்தது. அவர் தனது அமைதியான மற்றும் இதயப்பூர்வமான குரலால் பக்தி இசையை உயிர்ப்பித்தார்.
அமிர்தப் பாரம்பரியம் அம்ரித் பரம்பரா ஒரு குறிப்பிடத்தக்க திருவிழா அனுபவமாகத் தொடர்கிறது. இது தில்லி முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளுடன் நவீன, ஈர்க்கக்கூடிய நடைமுறையில் ஈடுபடுவதற்கான தனித்துவ வாய்ப்பை வழங்குகிறது. அடுத்த இரண்டு நாட்கள் இந்தியாவின் கலாச்சார நிலப்பரப்பில் மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும். புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.
*******
SMB/KV
(Release ID: 2070477)
Visitor Counter : 59