சுற்றுலா அமைச்சகம்
மைசூரு சங்கீத சுகந்தா விழா 2024க்கான முன்னோட்ட மெல்லிசை நிகழ்ச்சி
Posted On:
02 NOV 2024 11:13PM by PIB Chennai
மதிப்புமிக்க மைசூரு சங்கீத சுகந்தா விழா 2024க்கான முன்னோட்ட நிகழ்வுகளை சுற்றுலா அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த முன்னோட்ட நிகழ்வுகள், நவம்பர் 2, 2024 அன்று பெங்களூரு தேசிய நவீன கலைக் கலைக்கூடம், ருத்ரபட்னாவின் ராமமந்திரம் மற்றும் தொட்டமல்லூரில் உள்ள அர்பிரேயசுவாமி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கர்நாடகாவின் செழுமையான இசை பாரம்பரியம் கொண்டாடப்பட்டு, மைசூரில் முக்கிய திருவிழாவிற்கு மேடை அமைத்தது.
பெங்களூரு தேசிய நவீன கலைக் கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருமதி ஆர்.ஏ.ரமாமணியின் கர்நாடக இசைக் கச்சேரி இடம்பெற்றது, அவரது ஆத்மார்த்தமான குரல், பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்நிகழ்வில் தேசிய நவீன கலைக் கலைக்கூடத்தின் இயக்குநர் திருமதி பிரியங்கா மேரி பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது பங்கேற்பு, கர்நாடகாவின் இசை மரபுகளை மேம்படுத்த கலை மற்றும் கலாச்சாரத்தை கலப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
மைசூருவில் உள்ள கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டபத்தில் 2024 நவம்பர் 8 முதல் 10 வரை நடைபெறும் முக்கிய மைசூர் சங்கீத சுகந்தா விழாவிற்கு முன்னோட்ட நிகழ்வுகள் வழிவகுத்தன. பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் சுற்றுலா அமைச்சகம் அழைப்புவிடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070389
***************
BR/KV
(Release ID: 2070418)
Visitor Counter : 16