எஃகுத்துறை அமைச்சகம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்-2024-ன் நிறைவு விழா ஆர்ஐஎன்எல் நிறுவனத்தில் நடைபெற்றது
Posted On:
02 NOV 2024 6:50PM by PIB Chennai
விசாகப்பட்டினம் ஆர்ஐஎன்எல் எஃகு ஆலை இன்று (02.11.2024) தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி (CVO) டாக்டர் S. கருணா ராஜு, தலைமையில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (CVC) வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு விழாவை நடத்தியது.
விசாகப்பட்டினம் என்எஸ்டிஎல் இயக்குநர் டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ், ஆர்ஐஎன்எல் இயக்குநர்கள், சிஐஎஸ்எஃப் கமாண்டன்ட் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், ஆர்ஐஎன்எல் ஊழியர்கள், பள்ளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஆர்ஐஎன்எல் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி (சி.வி.ஓ) டாக்டர் எஸ்.கருணா ராஜு தமது உரையில், அரசு நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான முக்கியமான தேவையை வலியுறுத்தினார். நேர்மைக்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை டாக்டர் எஸ் கருணா ராஜு எடுத்துரைத்தார். பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஆர்ஐஎன்எல் மூத்த அதிகாரிகளிடையே உரையாற்றிய என்.எஸ்.டி.எல் இயக்குநர் டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ், இந்த ஆண்டின் கருப்பொருளான "தேசத்தின் வளத்திற்காக ஒருமைப்பாட்டின் கலாச்சாரம்" என்பது குறித்து எடுத்துரைத்தார். நேர்மை, தனிநபர் நெறிமுறைகள், தார்மீக நடத்தை ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்பை வலியுறுத்திய அவர், இந்த அம்சங்கள் எவ்வாறு திறமையான ஆளுகை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்பதை விளக்கினார்.
விழாவின் சிறப்பம்சமாக பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களை அங்கீகரிக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆர்ஐஎன்எல் லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புத் துறைத் தலைவர் தீபங்கர் தாஸ் நன்றியுரை வழங்கினார்.
*****
PLM/KV
(Release ID: 2070361)
Visitor Counter : 19