பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உயர்தர தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 02 NOV 2024 5:57PM by PIB Chennai

 

 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நனவாக்க இந்திய இளைஞர்கள் உள்நாட்டிலேயே உயர்தர தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று 2024 நவம்பர் 02) கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) 65-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.

தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்  'தொழில்நுட்பம்' மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்உயர்தர தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இளைஞர்கள் தங்கள் திறனை உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று கூறினார். கான்பூர் ஐஐடி கான்பூர் போன்ற கல்வி நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

 போர் சூழலில் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் பங்கை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், ட்ரோன்கள், லேசர் போர், சைபர் போர், துல்லியமாக செலுத்தப்படும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆகியவற்றின் பயன்பாடு, போரை தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது என்று கூறினார். போரின் மாறிவரும் தன்மையைக் கருத்தில் கொண்டு நவீன அதிநவீன தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற தனியார் துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இளைஞர்களின் வலிமையால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று இந்தியா கனவு கண்டுள்ளது என்றும் அந்தக் கனவை நனவாக்க நாம் நமது முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி, 2023-24ம் நிதியாண்டில் ரூ.21,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றம் தொடரும் என்றும், 2029-30-ம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 50,000 கோடியை எட்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த 65-வது நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கான்பூர் ஐஐடி, 'தற்சார்பு இந்தியா' என்ற கருப்பொருளுடன் இணைந்த பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் குறித்த சிறப்பு நிகழ்வை நடத்தியது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தயாரிப்பு, தொழில் பாதுகாப்புக் கண்காட்சியை திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார்பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், கான்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****

PLM/KV

 




(Release ID: 2070354) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi