நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
01 NOV 2024 4:47PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தன.
சிறந்த இட மேலாண்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள், சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுதல், சாதனை மேலாண்மை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு உத்வேகத்துடன் நிதி சேவைத் துறை செயல்பட்டது.
பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, சிட்பி, எக்ஸிம் வங்கி, ஐஎப்சிஎல் போன்ற பிற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் ஆர்வத்துடன் பங்கேற்றன.
அடையாளம் காணப்பட்ட அனைத்து பொதுமக்கள் குறை தீர்வு, பொது முறையீடுகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள் ஆகியவற்றுக்கு இத்துறை 100% தீர்வு கண்டுள்ளது. 11.79 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, கழிவுகளை அகற்றுவதன் மூலம் ரூ.4.50 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 38,500-க்கும் மேற்பட்ட தளங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
பன்னிரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஓய்வூதிய குறைதீர்ப்பு வாரங்களை ஏற்பாடு செய்தன. இம்முகாம்களில், பதிவு செய்யப்பட்ட குறைகள் தவிர, ஓய்வூதியதாரர்களுக்கு இணையதளம் மூலம் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல், வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை வழங்குதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 52,208-க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 1.45 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070163
***
TS/PKV/RR/DL
(Release ID: 2070210)
Visitor Counter : 34