பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0: நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தேசிய பட்டறையை ஏற்பாடு செய்தது
Posted On:
01 NOV 2024 3:08PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 4.0 இன் ஒரு பகுதியாக, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை இ-அலுவலகம், மின்-அலுவலக பகுப்பாய்வு டாஷ்போர்டு குறித்த தேசிய பட்டறையை ஏற்பாடு செய்தது.
(i) மின்-அலுவலகம் 7.0 மற்றும் இணைக்கப்பட்ட / சார்நிலை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் மின்-அலுவலகத்தை செயல்படுத்துதல் குறித்த பயிலரங்கின் போது விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. (ii) முடிவெடுத்தல் மற்றும் மின்னணு அலுவலக பகுப்பாய்வு டாஷ்போர்டு ஆகியவற்றில் செயல்திறனை அதிகரிப்பதற்கான அரசின் முன்முயற்சி. (iii) இணைய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் மின்னணு அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் (iv) பயனர் அனுபவம் மற்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
தற்போது மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இ-அலுவலகப் பயன்பாடு சுமார் 95% ஆக உள்ளது.
நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறைச் செயலாளர் திரு வி. சீனிவாஸ், மத்திய செயலக அலுவலக நடைமுறை கையேட்டில் திருத்தங்கள் மூலம் மின்னணு அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள அமைச்சகங்கள் / துறைகளை வலியுறுத்தினார்.
தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையத் (என்.சி.ஐ.ஐ.பி.சி.) தலைமை இயக்குநர் திரு. நவீன் குமார் சிங், இந்த பயிலரங்கு மத்திய அரசு ஊழியர்களிடையே இணைய பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வோடு, கல்வியை உருவாக்குவதற்கான ஒரு மேடையாகும் என்று கூறினார்.
ஊழியர் மற்றும் பயிற்சித்துறை, உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை ஆகியவை இ-அலுவலக அமைப்பில் மேம்படுத்துவதற்கான பின்னூட்டங்களாகப் பயன்படுத்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன.
***
TS/LKS/KPG/KV
(Release ID: 2070153)
Visitor Counter : 8