இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது விளையாட்டுத் துறை
Posted On:
01 NOV 2024 3:11PM by PIB Chennai
விளையாட்டுத் துறை, அதன் கீழ் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம், லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம், தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத்துறை ஏற்பாடு செய்த சிறப்பு பிரச்சாரம் 4.0 க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
இந்தப் பிரச்சாரம், துறையின் நெறிமுறைகளுக்குள் தூய்மை கொள்கைகளை உட்பொதிப்பதையும், நீண்டகால நிலுவையில் உள்ள விஷயங்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. அக்டோபர் 2, 2024 அன்று மேஜர் தியான்சந்த் ஸ்டேடியத்தில் ஃபிட் இந்தியா தூய்மை விடுதலை ஓட்டம் 5.0-ன் உற்சாகமான தொடக்கத்துடன் விளையாட்டுத் துறை இந்த முயற்சியைத் தொடங்கியது. இது உடற்பயிற்சி மற்றும் தூய்மை கருப்பொருள்களை பின்னிப்பிணைத்தது.
இந்த இயக்கத்தின் போது நிலுவையில் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகளுக்கு துறை பதிலளித்தது. 30 பொதுக் குறைகளை தீர்த்தும் வைத்தது. துறையின் மூத்த அதிகாரிகளின் தீவிர மேற்பார்வையின் கீழ் 2 நாடாளுமன்ற உத்தரவாதம் களையும் நிறைவேற்றியது. இந்த அர்ப்பணிப்பானது மேற்பார்வை நோக்கங்களை செயல்திறன் மற்றும் தாக்கம் இரண்டுடனும் பூர்த்தி செய்வதை உறுதி செய்தது.
இந்த இயக்கம் கோப்புகள், டிஜிட்டல் கோப்புகள் மேலாண்மையிலும் கவனம் செலுத்தியது. அதன்படி, 210 கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் 120 கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. 220 மின்-கோப்புகளின் மதிப்பாய்வு நிறைவைக் கண்டது. இது டிஜிட்டல் பதிவுகள் நிர்வாகத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கள அலுவலகங்கள் மற்றும் இத்துறையின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களில் அடையாளம் காணப்பட்ட 44 இடங்களில் தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக 12,000 சதுர அடி இடம் மீட்கப்பட்டது. புதிதாக கிடைத்துள்ள பல பகுதிகள் மதிப்புமிக்க பயன்பாட்டு இடங்களாக மறுசீரமைக்கப்பட்டன. மேலும், இந்த இயக்கத்தின் போது கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.1,76,000 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது தூய்மையை கடைபிடிப்பதில் நீடித்த தன்மை மற்றும் வளத்திற்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்தத் துறை மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளால் 24 ட்வீட்டர் பதிவுகள் செய்யப்பட்டன.
மேற்கண்ட முன்முயற்சிகள் மூலம், விளையாட்டுத் துறை தூய்மையின் மாண்புகளை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நடைமுறை மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
***
TS/PKV/RR/KV
(Release ID: 2070148)
Visitor Counter : 8