நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0: உணவு மற்றும் பொது விநியோகத் துறை நிறைவு செய்துள்ளது

Posted On: 01 NOV 2024 2:24PM by PIB Chennai

 

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக  அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது அரசு அலுவலகங்களில் தூய்மையை உறுதி செய்வதற்கும் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதில் காலத்தைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-ஐ நிறைவு செய்துள்ளது.

திரு ஜோஷி மற்றும் திருமதி பம்பானியா ஆகியோர் சிறப்பு இயக்கம் 4.0-ன் ஏற்பாடுகளுக்குத் தலைமை தாங்கி இருந்தனர்.

செயல்படுத்தல் கட்டத்தின் போது சுத்தம் செய்தல், பதிவு செய்தல், இட மேலாண்மைக்கான இலக்குகளை அடையாளம் காண 2023 செப்டம்பர் 15, அன்று ஆயத்த கட்டத்துடன் இயக்கம் தொடங்கியது.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்கள், தூய்மை மற்றும் நிலுவை சார்ந்த பணிகளை நிறைவேற்றும் காலகட்டத்தைக் குறைத்தல் குறித்த சிறப்பு இயக்கம் 4.0 மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டது.

------

TS/LKS/KPG/KV


(Release ID: 2070130) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi