பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான் அல்ஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணம்

Posted On: 30 OCT 2024 7:05PM by PIB Chennai

முப்படைகளின் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌகான்  2024 அக்டோபர் 31 முதல், 2024 நவம்பர் 04 வரை அல்ஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார். இது பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.  

தமது பயணத்தின் போது, ஜெனரல் அனில் சௌகான் அல்ஜீரிய ராணுவத்தின் தலைமைத் தளபதி சயீத் சானெக்ரிஹாவை சந்தித்துப் பேசுவார். அத்துடன் அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடனும் அவர் பேச்சு நடத்த உள்ளார். 

ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பு நலன்களை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு, இருதரப்புப் பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவை குறித்து அல்ஜீரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்வார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்தப் பயணத்தின் போது கையெழுத்தாகவுள்ளது.

1954 நவம்பர் 01 ஆம் தேதி நடைபெற்ற அல்ஜீரியப் புரட்சியின் 70-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ராணுவ அணிவகுப்பு விழாவுக்கு ஜெனரல் சௌகான் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.  அல்ஜீரியாவில் உள்ள மதிப்புமிக்க போர் பள்ளிக்கும் திரு அனில் சௌகான் செல்ல உள்ளார். அங்கு அவர் மூத்த அதிகாரிகளிடையே உரையாற்றுவார்.

 குடியரசுத் தலைவர் அண்மையில் அல்ஜீரியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி, அந்நாட்டுக்கு இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
 

***

PLM/DL


(Release ID: 2069686) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi