அணுசக்தி அமைச்சகம்
சிறப்பு முகாம் 4.0 - அணுசக்தி துறை
Posted On:
30 OCT 2024 5:18PM by PIB Chennai
அணுசக்தித் துறையுடன் அதன் அனைத்து பிரிவுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு உதவி பெறும் நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பு இயக்கம் 4.0 க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய தங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. 17.10.2024 வரை 12612 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 12155 கோப்புகள் அகற்ற அடையாளம் காணப்பட்டுள்ளன. அணுசக்தித் துறையின் இதர பிரிவுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அணுசக்தித் துறையின் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மூலம் 51 தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டு, பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.481238/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அணுசக்தித் துறையின் அனைத்து உறுப்புப் பிரிவுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மூலம் தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் 'எக்ஸ்' சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069587
***
TS/IR/RS/DL
(Release ID: 2069623)
Visitor Counter : 34