அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ராஜஸ்தான் கிராமம் கழிவுகள் இல்லாத நிலையை நோக்கி முன்னேறுகிறது
Posted On:
29 OCT 2024 3:11PM by PIB Chennai
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆண்டி. இது ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவில் உள்ளது. பசுமைத் தொழில்நுட்பப் பயன்பாடுகளின் உதவியுடன் கழிவுகள் இல்லாத மாதிரி கிராமமாக இது தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது.
உணவுக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், கழிவு நீர், மருத்துவமனைக் கழிவுகள், பள்ளிகள், விவசாய நிலங்கள், சமூக சுகாதார நிலையங்கள் போன்ற பல்வேறு கிராம ஆதாரங்களில் இருந்து வரும் கழிவுகள், இந்த கிராமத்தில் அண்மையில் நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் வளங்களாக மாற்றப்படுகின்றன.
அண்மையில், அரசுப் பள்ளி, சமுதாய நலக்கூடம் மற்றும் பிரதான குளத்தில் அமைக்கப்பட்ட ஈரநிலம் என அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் செய்முறை ஆலைகள் திறக்கப்பட்டன. இதில் பருவநிலை, எரிசக்தி மற்றும் நிலையான தொழில்நுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா குப்தா, திட்ட அலுவலர் டாக்டர் ஜி.வி.ரகுநாத் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளியில் உள்ள கரிமக் கழிவு உயிரி-மெத்தனேஷன் ஆலை (100 கிலோ கொள்ளளவு) கரிமக் கழிவுகளான உணவுக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவற்றை காற்றில்லா செரிமானம் மூலம் உயிரிவாயுவாக மாற்றுகிறது. 5 கிலோவாட் சூரிய சக்தி அமைப்புடன் இது பொருத்தப்பட்டுள்ளது. சமையல் மற்றும் மின்சார உற்பத்திக்கு சுத்தமான ஆற்றலை இது வழங்குகிறது, பாரம்பரிய எரிபொருட்கள் மீதான நம்பிக்கையை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தூய்மையான காற்று மற்றும் குறைந்த பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை ஊக்குவிக்கிறது.
கழிவுநீரை வடிகட்டுவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் மண்புழுக்களைப் பயன்படுத்துவதன் மூலம், சமூக சுகாதார மையத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் திறன் உள்ள வெர்மிஃபில்ட்ரேஷன் தொழில்நுட்பம், கழிவுநீரை சுத்திகரிக்க ஏற்றதாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பாசனத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம். காப்புரிமை பெற்ற இந்தத் தொழில்நுட்பத்தில் சூரிய சக்தி ஒருங்கிணைப்பு என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கழிவு நீர் மேலாண்மை செயல்முறையை உறுதி செய்கிறது, இது நிலையான நீரின் மறுபயன்பாட்டுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது.
ஆண்டி கிராமத்தில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான குளத்தில் அமைக்கப்பட்ட ஈரநிலங்கள், கழிவுநீரைச் சுத்திகரித்து சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கும் இயற்கை ஈரநில செயல்முறைகளைப் பிரதிபலிக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தையும், உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் ஆதரிப்பதோடு, குளத்தின் ஒட்டுமொத்த தூய்மையையும் மேம்படுத்தும் .அதே வேளையில் கிராமக் கழிவுநீரை நிர்வகிக்க இந்த அமைப்பு உதவும்.
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை வளமீட்பு மையத்தில் சேகரித்து பிரித்தெடுப்பதற்கு மறுசுழற்சி முகமைகளுடன் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது முறையான அகற்றல் மற்றும் மறுசுழற்சியை உறுதி செய்கிறது. மண்புழு உரம் தயாரிக்கும் அலகுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் கிராம மக்களிடையே பரவலாக்கப்பட்டுள்ளன.
இந்த முன்முயற்சிகள் கிராமப்புற சமூகங்களில் பசுமைத் தொழில்நுட்பத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன,
மேம்பட்ட பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள மற்ற கிராமப்புறங்களில் பிரதிபலிக்கும் கழிவற்ற மேலாண்மையின் சுய-நிலையான மாதிரியை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தகைய தலையீடுகள் பல்வேறு கிராமங்களில் பிரதிபலிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கக்கூடும். இது இந்தியாவை உள்ளடக்கிய மற்றும் நிலையான நிகர கழிவுகளற்ற தேசத்தை நோக்கி முன்னேறுவதற்கான புதிய பாதையை உருவாக்கும்.
******
AD/PLM/KPG/DL
(Release ID: 2069361)
Visitor Counter : 7