பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணியிடங்களில் தூய்மையை பராமரிக்க வாரத்தில் சில மணி நேரங்கள் ஒதுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted On: 29 OCT 2024 5:40PM by PIB Chennai

பணியிடங்களை தூய்மையாக பராமரிக்க ஒவ்வொரு வாரமும் சில மணி நேரங்களை ஒதுக்குமாறும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தனித்தனியாக இதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.  இது தூய்மையையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறினார். அவர் இன்று 2024 அக்டோபர் 29  சவுத் பிளாக்கில் உள்ள ஊழியர்கள் தூய்மை உறுதிமொழியை  மேற்கொள்ள வைத்தார். மேலும் நுழைவாயில் எண் 09-ல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நடைபாதை மற்றும் அலுவலக வளாகங்களை ஆய்வு செய்தார்.

சவுத் பிளாக் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிப்பதில் அயராது உழைத்த தூய்மை வீரர்களையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

பழைய ஆவணங்களை அகற்றுதல், பழைய உபகரணங்கள் மற்றும் அறைகலன்களை அகற்றுதல் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைகள் மற்றும் குறைகளைக் களைதல், நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதன் துணை அலுவலகங்கள் இணைந்து நாடு முழுவதும் 3,832 இடங்கள் / தளங்களில் தூய்மை இயக்கத்தை நடத்தின. கிடைக்கக்கூடிய வளங்களை லாபகரமான முறையில் பயன்படுத்துவதும், பழைய கழிவுகளை அப்புறப்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டுவதும் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

 நாடு முழுவதும் 2.81 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான இடம் தூய்மை பணி மூலம் காலியாக்கப்பட்டது.  மொத்தம் 36,444 நேரடி கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

***

TS/IR/AG/DL


(Release ID: 2069316) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi