நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0: நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க பணிகள்

Posted On: 29 OCT 2024 1:01PM by PIB Chennai

2024 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டு 2024 அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 4.0-ல் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது . தூய்மை நடைமுறைகளை நிறுவனமயமாக்குவதற்கும் , பல்வேறு பிரிவுகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முயற்சி உள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முக்கிய சாதனைகள்:

பதிவு மேலாண்மை:  இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கோப்புகளில் 90%-க்கும் அதிகமானவை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

நிலுவை குறிப்புகள்: பிரதமர் அலுவலக குறிப்புகள், மாநில அரசுக் குறிப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள் ஆகியவை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளன.

சிறப்பு இயக்கம் 4.0-ன் இலக்குகளை அடையவும், தொடர்ந்து தீவிரமாக செயல்படவும் வேண்டும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தனது அனைத்து ஊழியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது . அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், தூய்மையிலும் நல் ஆளுகையிலும் நீடித்த முன்னேற்றங்களை அடைய முடியும்.

*****

(Release ID: 2069129)

TS/PLM/RR/KR




(Release ID: 2069168) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi