வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் 82-வது கூட்டமானது முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது
Posted On:
29 OCT 2024 10:23AM by PIB Chennai
பிரதமரின் விரைவுசக்திப் பெருந்திட்ட முன்முயற்சியின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் (NPG) 82-வது கூட்டம், தொழில்- உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் 2024 அக்டோபர் 24 அன்று நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
ரயில்வே அமைச்சகத்தின் திட்டங்கள்
- மொத்தம் 64 கி.மீ நீளமுள்ள ஜார்சுகுடா-சம்பல்பூர் பிரிவில் அமைந்துள்ள ரயில் பாதை
- சம்பல்பூர் - ஜராபாடா இடையேயான ரயில் பாதை விரிவாக்கம்
- திருப்பதி-காட்பாடி இரட்டை வழித்தடம், ஆந்திரா - தமிழ்நாடு
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் இரண்டு (02) திட்டங்கள்
(i) கோடெர்மா - அரிகடா ரயில் பாதை
(ii) ஷிவ்பூர் - கதௌதியா ரயில் பாதை
சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் திட்டங்கள்
- பிரயாக்ராஜ் - ஜான்பூர் - அசாம்கர் - தோஹரிகாட்-கோரக்பூர் சாலை, உத்தரபிரதேசம்
- காசிப்பூர்-சையத் ராஜா சாலைப் பிரிவு, உத்தரபிரதேசம்
இந்தத் திட்டங்கள் குறித்து 82-வது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இவை நிறைவடையும் போது, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
----
(Release ID 2069070)
TS/PLM/KPG/RR
(Release ID: 2069127)
Visitor Counter : 16