பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் சிறப்பு இயக்கம் 4.0, முழுமையான அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது
Posted On:
28 OCT 2024 3:56PM by PIB Chennai
நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0, தூய்மையை நிறுவனமயமாக்கவும் நிலுவையிலுள்ள பணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டு கால கட்டம் 2024 அக்டோபர் 02 அன்று தொடங்கியது.
2024 அக்டோபர் 25 அன்று நிர்வாக சீர்த்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற தூய்மை, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0 தொடர்பான ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் 7-வது கூட்டத்தில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் துறைச் செயலாளர் பங்கேற்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் 84 அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 192 மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் சிறப்பு இயக்கம் 4.0-வில் பங்கேற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சகங்கள், துறை அலுவலகங்களில் இந்த இயக்கத்தின் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகள் பின்வருமாறு:
தூய்மை இயக்கத்தின் கீழ் 3.07 லட்சம் அலுவலக இடங்கள் உள்ளன
• 127 லட்சம் அடி இடம் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளது
• கழிவுகளை அகற்றுவதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.279
கோடி
• 4.27 லட்சம் முதுநிலை முறையீடுகளுக்கு தீர்வு
• 29.47 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 15.44 லட்சம் கோப்புகள் மீது பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
• 3.51 லட்சம் மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2068983)
Visitor Counter : 45