பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0 – மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றப் பணிகள்
Posted On:
28 OCT 2024 2:45PM by PIB Chennai
மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து தன்னாட்சி அமைப்புகள் உட்பட, அனைத்து அலுவலகங்களிலும், 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை தூய்மையை மேம்படுத்துவதற்கும் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கும் சிறப்பு இயக்கம் 4.0-வை செயல்படுத்தி வருகிறது.
தூய்மைப் பணிகள், இட மேலாண்மை, அலுவலகங்களை அழகுபடுத்துதல், கழிவுப் பொருட்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்தல், குறைதீர்ப்பு, மேல்முறையீடு, கோப்புகளை ஆய்வு செய்து முடித்து வைத்தல் போன்ற பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
24.10.2024 நிலவரப்படி சிறப்பு இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம்:
நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகள் 24, மாநில அரசு குறிப்புகள் - 7, பொதுமக்கள் குறைதீர்ப்பு - 1077, பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடு - 80, கோப்புகள் - 1690, மின்-கோப்புகள் -852 ஆகியவற்றின் மீது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டு 3,72,918 சதுர அடி இடம் பயன்பாட்டுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.1,77,330/- வருவாய் கிடைத்துள்ளது.
***
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2068921)
Visitor Counter : 38