அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

காப்புரிமை மூலம் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மூலிகை ஞானம்

Posted On: 28 OCT 2024 11:14AM by PIB Chennai

ஜம்மு & காஷ்மீர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மூலிகை பாரம்பரிய ஞானத்தின் பாதுகாவலர்களுக்கு முன்னதாக காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும் அதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையிலும் அக்டோபர் 22, 2024 அன்று நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சிகளில் மூலிகை காப்புரிமைகள் வழங்கப்பட்டன.

பாரம்பரிய மூலிகை அறிவு அமைப்புகளின் வளம் இந்தியாவில் உள்ளது. இந்த மதிப்புமிக்க அமைப்புகள் பாதுகாக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தலைசிறந்த பாரம்பரிய அறிவாளிகளால் பராமரிக்கப்பட்டு, இயற்கை வளங்களின் நிலைத்தன்மைக்கு வழிவகை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மூலிகைகள் பற்றிய ஞானம் உள்ளவர்கள் தங்கள் சூழலியல் அமைப்புடன் தொடர்பு கொள்கிறார்கள். அனுபவங்கள், சோதனைகள் மற்றும் ஞானம் மூலம் திரட்டப்பட்ட உள்ளூர் தாவரங்களைப் பற்றிய ஆழமான புரிதலை அவர்கள் கொண்டுள்ளனர். இந்த நடைமுறைகள் மனித ஆரோக்கியம் மற்றும் கால்நடைகள் உட்பட விவசாயத்தில் உள்ள சவால்களைத் தீர்ப்பதற்கான கருவிகளாகும். சுற்றுப்புற சுகாதாரம், நுண்ணுயிர் எதிர்ப்பு, இந்த நிலையான நடைமுறைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய மூலிகை மருந்துகளை சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமான அங்கீகாரம் வேண்டும்.

இந்தியாவின் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (என்ஐஎஃப்) நாட்டின் சுதேச அறிவு முறையை பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளது. என்.ஐ.எஃப் சிறந்த பாரம்பரிய அறிவு நடைமுறைகளின் மிகப் பெரும் தொகுப்பை பாதுகாத்து வருகிறது. அறிவுசார் சொத்துரிமை மூலம் இந்த ஞானம் பாதுகாக்கப்படுகிறது.

அறிவியல் சான்றுகளுடன் இந்த சுகாதார மரபுகளைப் பாதுகாப்பது பெரிய சமூக இலக்குகளுக்கான முறைசாரா மற்றும் முறையான அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (என்ஐஎஃப்) மூலிகை காப்புரிமை மானியங்களுடன் 26 சிறந்த அறிவாளிகளை அங்கீகரித்துள்ளது. இது வணிக மற்றும் சமூக முயற்சிகளுக்கான தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த உதவும்.

இத்தகைய அறிவு பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் தொழில்நுட்ப தயார்நிலை  அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மூலிகை நடைமுறைகளை முன்னேற்றுவதற்கும் தொழில்துறை கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் உதவும். இந்த கூட்டு முயற்சிகள் பொது சுகாதார பிரச்சினை களுக்கு உள்நாட்டிலேயே செலவு குறைந்த தீர்வுகளை நோக்கிய பாதையை வகுக்கும்.

இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் மூலிகை பாரம்பரியத்திற்கு இன்றியமையாதவையாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஆற்றலை மேம்படுத்தக்கூடிய நிலையான நடைமுறைகளுக்கான முக்கியமான தேவையை வலியுறுத்துகின்றன. இந்த அம்சங்கள் உள்நாட்டு அறிவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன, அதே நேரத்தில் நிலையான நடைமுறைகளின் வளர்ச்சிக்கும், மூலிகை மருத்துவ தயாரிப்புகளின் மருந்து வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது, புதிய சிகிச்சை / ஆதரவு தயாரிப்புகளுடன் சுகாதார அமைப்பை பூர்த்தி செய்ய உதவுகிறது.
 

***

(Release ID: 2068785)

TS/PKV/RR/KR




(Release ID: 2068835) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Gujarati