அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிறப்பு இயக்கம் 4.0: புது தில்லி ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கத்தை நடத்தியது சிஎஸ்ஐஆர்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2024 1:35PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக, அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆர்), வடக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து, புது தில்லி ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கத்தை மேற்கொண்டது.
சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி, புதுதில்லி ரயில் நிலைய இயக்குநர் திரு மகேஷ் யாதவ் ஆகியோர் தூய்மை இயக்கத்தை முன்னின்று வழி நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, புதுதில்லி ரயில் நிலையத்தின் தூய்மைப் பணியாளர்களை சிஎஸ்ஐஆர் கௌரவித்தது.
பொது தூய்மையைப் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பை சிஎஸ்ஐஆர் பாராட்டியது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் முயற்சியாக மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது.
சிஎஸ்ஐஆர் - இந்திய ரயில்வே இடையிலான ஒத்துழைப்பு, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சிறப்பு இயக்கம் 4.0-ன் இலக்குகளை அடைவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
*****
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2068654)
வருகையாளர் எண்ணிக்கை : 95