குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய கலாச்சாரத்தின் மிக அடிப்படையான கோட்பாடு தர்மம் – குடியரசு துணைத்தலைவர்

Posted On: 26 OCT 2024 2:58PM by PIB Chennai

 

தர்மம் என்பது இந்திய கலாச்சாரத்தின் மிக அடிப்படையான கருத்தாகும், இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது. பாதை மற்றும் இலக்கு ஆகிய இரண்டையும் தர்மம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மேலும் நேர்மையான வாழ்க்கைக்கு கற்பனாவாத லட்சியமாக இல்லாமல் நடைமுறை லட்சியமாக செயல்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர்  கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர்ண பாரதி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த 'நம சிவாய' பாராயணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், மனிதகுலத்தின் மிகப் பழமையான மற்றும் தொடர்ச்சியான வாய்மொழி மரபுகளில் ஒன்றான வேத நாமஜபம், நமது மூதாதையரின் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்துடன் வாழும் இணைப்பாக செயல்படுகிறது என்று கூறினார். இந்தப் புனித மந்திரங்களின் துல்லியமான தாளங்கள், உச்சரிப்புகள் மற்றும் அதிர்வுகள் மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் சக்திவாய்ந்த அதிர்வுகளை உருவாக்குகின்றன என அவர்கூறினார்.

வேத வசனங்களின் முறையான கட்டமைப்பு மற்றும் சிக்கலான பாராயண விதிகள் பண்டைய அறிஞர்களின் அறிவியல் நுட்பத்தை பிரதிபலிக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம், ஒவ்வொரு அசையையும் கணித ஒத்திசைவில் உன்னிப்பாக உச்சரிப்பதன் மூலம், தலைமுறை தலைமுறையாக அறிவை வாய்வழியாக கடத்துவதற்கான இந்திய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க திறனை நிரூபிக்கிறது என அவர் தெரிவித்தார்.

காலப்போக்கில் பல்வேறு பாரம்பரியங்களின் கலவையின் மூலம் உருவாக்கப்பட்ட வேற்றுமையில் ஒற்றுமையே இந்திய கலாச்சாரத்தின் வரையறுக்கும் அம்சம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். இந்தப் பயணம் பணிவு மற்றும் அகிம்சை போன்ற மதிப்புகளை விதைத்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா, மனிதகுலம் முழுவதையும் ஒற்றுமை உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இணையற்றதாக நிற்கிறது. இந்திய கலாச்சாரத்தின் தெய்வீக சாரம் அதன் உலகளாவிய கருணையில் உள்ளது, இது "வசுதைவ குடும்பகம்" தத்துவத்தில் பொதிந்துள்ளது. இந்து மதம், சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் போன்ற முக்கிய மதங்களின் பிறப்பிடம் இந்தியா என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நமது கலாச்சாரத்தைச் சீரழிக்கவும், நமது கலாச்சாரத்தை கறைபடுத்தவும், களங்கப்படுத்தவும், நமது கலாச்சாரத்தை அழிக்கவும் மதவெறி  மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், நமது கலாச்சாரத்தை அழிக்க முடியாததால் நாடு பிழைத்துள்ளது என்று கூறினார். தனது எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய போதனைகள் மூலம் இந்திய கலாச்சாரத்தை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதில் ஆதி சங்கராச்சாரியாரின் பங்கை அங்கீகரித்த திரு தன்கர், இந்திய ஆன்மீகம் மற்றும் தத்துவத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆதி சங்கராச்சாரியாருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 'நம சிவாய' பாராயணத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், "இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரும் நமது கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள், தூதர் மற்றும் காலாட்படை வீரர்கள்" என்றார். இந்தப் பாராயணம், காலங்காலமாக போற்றப்பட்டு வரும் நாமஜபம் செய்யும் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்கு பெருமையுடன் கடத்துவோம் என்பதற்கான அதிகபட்ச நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது என்றும், இந்த நிகழ்வு பாரதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக செல்வத்தை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

செல்வத்தைப் பின்தொடர்வது பொறுப்பற்றதாகவோ அல்லது சுயநலமாகவோ இருக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். செல்வத்தை உருவாக்குவது மனித நலனுடன் ஒத்திசைவாக இருந்தால், அது மனசாட்சியைத் தூய்மைப்படுத்தி மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் கூறினார். தர்மம் அனைவருக்கும் நியாயம், அனைவருக்கும் சமமான நடத்தை, அனைவருக்கும் சமத்துவம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொண்டு, வணிக நெறிமுறைகள் ஆன்மீகக் கொள்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தர்மத்தால் ஆளப்படும் சமுதாயத்தில், ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமிஜி, ஸ்ரீ ஸ்ரீ சங்கர பாரதி மகாஸ்வாமிஜி, ஸ்ரீ ஸ்ரீ பிரம்மானந்த பாரதி மகாஸ்வாமிஜி மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****

PKV/KV

 

 

 

 


(Release ID: 2068462) Visitor Counter : 47