நிதி அமைச்சகம்
"சிறப்பு இயக்கம் 4.0"-ன் கீழ் 49 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 73 கிலோ போதை மருந்துகள், குட்கா / பான் மசாலா மற்றும் மின்-சிகரெட்டுகள் அழிப்பு
Posted On:
25 OCT 2024 7:35PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) #சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாகவும், சட்டவிரோத பொருட்களின் சட்டவிரோத இறக்குமதிக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், தில்லி சுங்க (தடுப்பு) ஆணையரகம், சுங்க (விமான நிலையம் மற்றும் பொது) ஆணையரகம் கூட்டாக மொத்தம் 49 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள், சுமார் 73 கிலோ போதை மருந்துகள் (ஹெராயின், கோகோயின், கஞ்சா, சரஸ் போன்றவை), குட்கா / பான் மசாலா மற்றும் இ-சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட மருந்துகள், சிகரெட்டுகள் போன்றவற்றின் மதிப்பு சுமார் ரூ.460 கோடியாகும். சுங்கச் சட்டம், என்.டி.பி.எஸ் சட்டம் மற்றும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தை மீறியதற்காக இந்த பொருட்கள் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2068229
***
MM/AG/DL
(Release ID: 2068248)