பாதுகாப்பு அமைச்சகம்
சாணக்யா பாதுகாப்பு மாநாடு புதுதில்லியில் நிறைவடைந்தது
Posted On:
25 OCT 2024 6:38PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் முதன்மை சர்வதேச மாநாடான, சாணக்யா பாதுகாப்பு உரையாடல், இன்று (25.10.2024) தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நிறைவடைந்தது. இந்த இரண்டு நாள் நிகழ்வு இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களை இது ஒன்றிணைத்தது.
சாணக்யா பாதுகாப்பு உரையாடல் - 2024, "விரிவான பாதுகாப்பின் மூலம் வளர்ச்சியைத் தூண்டுதல்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கையைச் சேர்ந்த முக்கிய வல்லுநர்களும் பங்கேற்றனர்.
இரண்டாவது நாள் உரையாடலில் இரண்டு சிறப்பு உரைகள் இடம்பெற்றன. இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ்.சோமநாத், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் விண்வெளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். நவீன காலங்களில் விண்வெளித் துறையின் முக்கியத்துவத்தை இஸ்ரோ தலைவர் விவரித்தார், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு, தகவல் தொடர்பு அமைப்புகளில் முன்னேற்றங்கள் ஆகியவை நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்தத் துறையின் வளர்ச்சிக்கும் முக்கியமானவை என்று அவர் எடுத்துரைத்தார்.
ஐநா-வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி திருமதி ருச்சிரா காம்போஜ் ஆற்றிய உரையில் இன்றைய பன்முக உலகை வடிவமைப்பதில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்து எடுத்துரைத்தார்.
சாணக்கியா பாதுகாப்பு கருத்தரங்கு, இந்தியாவின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளை சிறப்பாக மேம்படுத்தவது குறித்து விவாதிப்பதற்கான தளமாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068184
***
PLM/RS/DL
(Release ID: 2068238)
Visitor Counter : 33