மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிட்னியின் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் உள்ள மெக்குவாரி பூங்கா புதுமை கண்டுபிடிப்பு மாவட்டத்தை திரு தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார்
Posted On:
25 OCT 2024 5:22PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மெக்குவாரி பூங்கா புதுமை கண்டுபிடிப்பு மாவட்டத்தை பார்வையிட்டார். அவரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், தலைவருமான பேராசிரியர் எஸ் புரூஸ் டவ்டன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் சிந்தனைகளை மேம்படுத்தவும், மதிப்பிடவும் பல்கலைக்கழகம் எவ்வாறு உதவுகிறது என்பதை திரு பிரதான் கேட்டறிந்தார். ஒரு முழுமையான கற்றல் அனுபவத்தை உருவாக்க, தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் சமூகங்களுடன் ஒத்துழைப்பதற்கான, பல்கலைக்கழகத்தின் தனித்துவமான அணுகுமுறையை அவர் பாராட்டினார். இந்த பல்கலைக்கழகம், இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதையும் அமைச்சர் கேட்டறிந்தார். புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், வெற்றிக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கும் இதுபோன்ற வலுவான தொழில்துறை-கல்வி இணைப்புகள் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
பின்னர், ஜி-8 நாடுகள் குழு நடத்திய நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியா முழுவதும் படிக்கும் இந்திய மாணவர்களுடன் திரு பிரதான் கலந்துரையாடினார். ரோபோடிக்ஸ், ரசாயனங்கள், வானியற்பியல், சூப்பர் கண்டக்டிவிட்டி, உற்பத்தி, சுகாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், நீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் அதிநவீன ஆராய்ச்சியில் அவர்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆராய்ச்சித்துறையிலான ஒத்துழைப்பு, ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். மேலும் நுண்ணறிவு கலந்துரையாடல் சிந்திக்க பல அம்சங்களை வழங்கியுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் பரந்த மற்றும் ஆழமான ஆராய்ச்சி ஒத்துழைப்பு தேவை என்பதை உணர்த்தியுள்ளது என்றும் கூறினார். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் எதிர்காலத்திற்காக, ஆர்வத்துடன் பங்களிக்குமாறு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களையும் அவர் பாராட்டி ஊக்குவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068150
***
TS/MM/AG/DL
(Release ID: 2068223)