அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் 9-வது ஆயுர்வேத தினத்தை கொண்டாடியது
प्रविष्टि तिथि:
25 OCT 2024 4:49PM by PIB Chennai
மத்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொடர்பு -கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இன்று 9-வது ஆயுர்வேத தினத்தை கொண்டாடியது, நவீன சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை இந்த தினம் எடுத்துரைக்கிறது. தில்லியில் அதன் வளாகத்தில் இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் தொடக்க உரையாற்றினார்.
அவர் பேசுகையில், வேத காலத்தில் நம் நாட்டில் இருந்த இந்திய அறிவு முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் மாபெரும் பழங்கால அறிவு மையங்களான நாளந்தா, தக்ஷசீலா குறித்து அவர் பேசினார்.
பல்வேறு நோய்களைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் ஆயுர்வேதத்தின் திறனையும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068126
***
TS/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2068176)
आगंतुक पटल : 81