உள்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலிலும், உள்துறை அமைச்சகம் 4.0 சிறப்பு இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது
Posted On:
25 OCT 2024 3:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ஐ அமைச்சகத்திற்குள்ளும் அதன் இணைக்கப்பட்ட / துணை அலுவலகங்களிலும் நடத்தி வருகிறது. சிறப்பு இயக்கம் 4.0-க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய உள்துறை அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இந்த இயக்கத்தின்போது, நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் தொடர்பு கொண்ட கள / வெளியூர் அலுவலகங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் செப்டம்பர் 15, 2024 முதல் ஆயத்த கட்டத்துடன் தொடங்கியது, இதில் உள்துறை அமைச்சகம் மொத்தம் 7751 பிரச்சார தளங்களை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் இதுவரை 5000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் போது, 144 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், 41 நாடாளுமன்ற உத்தரவாதங்கள், 142 மாநில அரசுகளின் குறிப்புகள், 109 பிரதமர் அலுவலக குறிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், இதுவரை மொத்தம் 4000 பொதுமக்களின் குறைகளும், 180 மேல்முறையீட்டு மனுக்களும் கண்டறியப்பட்டு, அவற்றில் 2163 பொது மக்களின் குறைகள் மற்றும் 48 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (ஒருங்கிணைப்பு), உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (சிஏபிஎஃப்) அனைத்து பிரிவுகளுடனும் ஒரு கூட்டத்தை கூட்டினார். மேலும் அவர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டனர். அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அளவில் தினசரி முன்னேற்றம் கண்காணிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனைத்துப் பிரிவுகள், யூனியன் பிரதேசங்கள், சிறப்பு இயக்கம் தொடர்பான தரவுகளை அமைச்சகங்களுக்கு இடையேயான இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றன. இது உள்துறை அமைச்சகத்தின் சிறந்த நடைமுறைகளில் ஒன்று என்பதோடு, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் சரியான தரவைப் பெறவும் உதவுகிறது.
இந்த இயக்கம் உள்துறை அமைச்சகத்தால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் காகித மற்றும் மின்னணு கோப்புகளை மதிப்பாய்வு செய்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவாகியுள்ளது. மதிப்பாய்வுக்காக அடையாளம் காணப்பட்ட மொத்தம் 202459 காகிதக் கோப்புகள் மற்றும் 136387 மின்னணு கோப்புகளில், 183596 காகிதக் கோப்புகளும் 90014 மின்னணு கோப்புகளும் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்ட பிறகு, மொத்தம் 19864 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய ஆயுதக் காவல்படைகள் உள்ளிட்டோரால் ரூ. 52,40,754/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனைத்து இணைக்கப்பட்ட / துணை அலுவலகங்களிலும் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
பல்வேறு கள அலுவலகங்கள் / அலகுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் சில சிறப்பம்சங்கள்:
இதுவரை, சுமார் 500 பதிவுகள், #SpecialCampaign4 என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸ் தளத்தில் (முந்தைய ட்விட்டர்) வெளியிடப்பட்டுள்ளன.
***
TS/MM/AG/DL
(Release ID: 2068174)
Visitor Counter : 50