பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"கர்மயோகி வாரத்தின்" ஒரு பகுதியாக "பழங்குடியினருடன் உரையாடல்: சவால்களும் முன்முயற்சிகளும்" நிகழ்வுக்கு பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2024 3:15PM by PIB Chennai

தேசிய கற்றல் வாரத்தின் ஒரு பகுதியாக கர்மயோகி வாரத்தில்,   "பழங்குடியினருடன் உரையாடல்: சவால்களும் முன்முயற்சிகளும்" என்ற இணையவழி கருத்தரங்க நிகழ்வுக்கு 2024, அக்டோபர் 24 அன்று பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது 

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆர். ஜெயா, சமூக-பொருளாதார வளர்ச்சிஇந்தியப் பழங்குடியினரின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசியலமைப்பு விதிகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் அரிவாள் செல் அனீமியா நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தின் முயற்சிகள் குறித்தும் அவர் பேசினார். இதற்கான இயக்கத்தின்  நோக்கங்களை அடையும் திசையில் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி அமர்வுகள், ஊக்குவிப்பு பிரச்சாரம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், பங்கேற்பாளர்களால் இந்தக் கருத்தரங்கிலிருந்து  பெறப்பட்ட நுண்ணறிவுகள், தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் தேசிய கற்றல் வாரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றார்.

தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு இயக்குநரும்  புதுதில்லியில் உள்ள பொது நிர்வாகத்திற்கான இந்தியக் கல்விக் கழகத்தின் தலைவருமான பேராசிரியர் நுபுர் திவாரிஇந்தியாவில் உள்ள பழங்குடியினரைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அறிவு, சுதந்திரம் அடைந்ததிலிருந்து பழங்குடியினரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அரசு எடுத்த கொள்கை, அணுகுமுறை, முக்கியமான சட்டமன்ற கட்டமைப்புகள், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிக்க அரசு மேற்கொண்டுள்ள புதுமையான முயற்சிகள் ஆகியவை குறித்து பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068067

****

TS/SMB/RR/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2068159) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी