வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அம்ருத், பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்க செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பாராட்டு
Posted On:
25 OCT 2024 2:14PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் மற்றும் துணைநிலை ஆளுநர் திரு டி.கே.ஜோஷி ஆகியோர் ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள ராஜ் நிவாஸில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) 07 திட்டங்களை யூனியன் பிரதேசம் செயல்படுத்தி வருவதாக, தலைமைச் செயலாளர் தெரிவித்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு தனது முதல் பயணத்தின்போது, இந்த இயக்கத்தின் முன்னேற்றத்தை, குறிப்பாக அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கப்பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை அமைச்சர் பாராட்டினார். இவை, குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன.
வரும் ஆண்டுகளில், தூய்மை தரவரிசையில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஊக்குவித்தார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்) மற்றும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்தவும் திரு மனோகர் லால் ஊக்குவித்தார். பிரதமர் ஸ்வநிதி திட்டம் ஏற்கனவே அதன் இலக்கை அடைந்துவிட்டதாக யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூய்மையே சேவை இயக்கத்தின்போது அடையாளம் காணப்பட்ட நீண்டநாள் கழிவுகள் மற்றும் தூய்மை இலக்கு அலகுகள் (CTUs) முழுவதையும் அகற்றுமாறும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். நீண்டநாள் கழிவுகளை சரிசெய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அறிவிப்பதன் மூலம், நகர்ப்புறங்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அமைச்சர் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.
சுற்றுலா, சேவைகள் மற்றும் கல்வித்துறையில் ஏராளமானோரை ஈர்ப்பதற்கான புதுமையான வழிகளை அடையாளம் காணுமாறு திரு மனோகர் லால் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 2068042)
TS/MM/AG/KR
(Release ID: 2068090)
Visitor Counter : 32