திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
உலக திறன்போட்டி 2024-ல் வெற்றி பெற்றவர்களை மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி பாராட்டினார்
Posted On:
24 OCT 2024 7:13PM by PIB Chennai
பிரான்சின் லியோனில் சமீபத்தில் நடைபெற்ற உலகத் திறன்கள் 2024 போட்டியின் வெற்றியாளர்களை திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு) மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி இன்று பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெயந்த் சவுத்ரி, "உலக திறன் 2024-”ல் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டு பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். போட்டியில் அவர்கள் அபரிமிதமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், நாட்டின் உத்வேகம் அளிக்கும் அடையாளங்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அவர்களின் சாதனைகள் அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமல்ல, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியாவின் திறன் சூழலின் வலிமையையும் பிரதிபலிக்கின்றன என்று அமைச்சர் கூறினார்.
பிரவீன் குமார் (தடகளம்), அஜித் சிங் யாதவ் (தடகளம்), ஷரத் குமார் (தடகளம்), பிரணவ் சூர்மா (தடகளம்), சிம்ரன் சர்மா (தடகளம்), ரூபினா பிரான்சிஸ் (துப்பாக்கி சுடுதல்), ராகேஷ் குமார் (வில்வித்தை), செல்வி பிரீத்தி பால் (தடகளம்) ஆகிய 8 பாராலிம்பிக் வெற்றியாளர்களையும் திரு ஜெயந்த் சவுத்ரி கௌரவித்தார்.
மிட்டாய், தொழில் 4.0, ஹோட்டல் வரவேற்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா, பிரான்சின் லியோனில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அஷ்விதா, துரில் குமார் திரேந்திர குமார் காந்தி, சத்யஜித் பாலகிருஷ்ணன், ஜோதீர் ஆதித்யா கிருஷ்ணபிரியா ரவிக்குமார், அமரேஷ் குமார் சாஹு ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றவர்கள் ஆவர். அவர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067874
***
(Release ID: 2067928)
Visitor Counter : 47