மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொற்றுநோய் நிதி திட்டம் மற்றும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு நடவடிக்கையை 25-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
23 OCT 2024 10:32PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தியாவில் விலங்கு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார்: "தொற்றுநோயை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக இந்தியாவில் விலங்கு சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துதல்" மற்றும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு நடவடிக்கை ஆகிய இந்த 2 முயற்சிகளை அவர் புதுதில்லியில் காலை 10:00 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜி 20 ஷெர்பா திரு அமிதாப் காந்த், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பார்கள். இந்தியாவில் கால்நடை சுகாதார மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய ஆவணங்களும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்படும்.
***
(Release ID: 2067523)
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2067629)
आगंतुक पटल : 76