விவசாயத்துறை அமைச்சகம்
நெதர்லாந்து தூதர் மேதகு மரிசா ஜெரார்ட்ஸ் புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை சந்தித்தார்
Posted On:
23 OCT 2024 8:51PM by PIB Chennai
இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மேதகு மரிசா ஜெரார்ட்ஸ், புதுதில்லியில் உள்ள வேளாண் பவனில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளைக் கண்டறியவும், தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது.
தூதர் ஜெரார்ட்ஸ் நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துரைத்தார். இது விவசாயத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஒத்துழைப்பை, குறிப்பாக தோட்டக்கலையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அவர், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நிபுணத்துவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கான திறனை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை வலியுறுத்திய டாக்டர் சதுர்வேதி, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பரஸ்பர அக்கறை கொண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை சுட்டிக்காட்டினார்.
***
(Release ID: 2067502)
PKV/RR/KR
(Release ID: 2067609)
Visitor Counter : 31