பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கற்றல் வாரம், அறிவுப் பகிர்வு மூலம் இந்தியாவின் பொது சேவைக்கு அதிகாரம் அளித்தல்

Posted On: 23 OCT 2024 5:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட கர்மயோகி இயக்கத்தின் கீழ் 'கர்மயோகி வாரம்' நடைபெற்று வரும் நிலையில், தேசிய கற்றல் வாரம்  குடிமைப் பணி அதிகாரிகளின் வாழ்நாள் கற்றலையும், திறன் மேம்பாட்டையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. 2024, அக்டோபர் 24 அன்று திட்டமிடப்பட்டுள்ள காணொளிக் கருத்தரங்குகளில், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், பணியிடக் கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கியமான பல்வேறு தலைப்புகளில் முக்கிய வல்லுநர்கள் விவாதிக்கின்றனர்.

அரசு அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்துவதும் வலுவான, மிகவும் பொறுப்பாக செயல்படக் கூடிய திறன்களை வழங்குவதுமே இதன் குறிக்கோள்.

அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் காணொளிக் கருத்தரங்கில், ஆக்சிலார் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஆராய்ச்சிமேம்பாட்டில் உலகளாவிய முன்னணி நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணம் குறித்து உரையாற்ற உள்ளார்.

அதைத் தொடர்ந்து தி இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் திரு விநாயக் சாட்டர்ஜி இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பயணம் குறித்து உரையாற்றுகிறார்.

இதனையடுத்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின்  தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், இந்தியாவின் பொது சுகாதார சவால்களும் தீர்வுகளும் என்பது குறித்து பேசவுள்ளார்.

பிரம்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பைச் சேர்ந்த பி.கே.ஷிவானி, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், போபாலில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு அனுராக் பெஹர், ஆகியோரும் அடுத்தடுத்த அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர். இவை கர்மயோகி இயக்கத்தின்  முக்கிய கொள்கைகளை பிரதிபலித்து, தொடர்ச்சியான கற்றல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும்.

----

TS/PLM/KPG/DL




(Release ID: 2067476) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi