எஃகுத்துறை அமைச்சகம்
இந்திய எஃகு ஆணைய நிறுவனம் மதிப்புமிக்க மனித வள மேலாண்மை சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளது
Posted On:
22 OCT 2024 5:34PM by PIB Chennai
இந்திய எஃகு ஆணைய நிறுவனம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற மதிப்புமிக்க மனித வள மேலாண்மை விருது ஆண்டு மாநாடு 2024-ல் 'உள்ளடக்கம், சமபங்கு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குதல்' மற்றும் பணியாளர்களை நிர்வகிப்பதில் சிறந்து விளங்குதல்' பிரிவுகளுக்கான மனித வள மேலாண்மை சிறப்பு விருதுகளைப் பெற்றது.
இந்த விருதுகள், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தில் பணியாளர்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, நாடு முழுவதும் உள்ள அதன் பல்வேறு ஆலைகள் மற்றும் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் முன்னோடி மனிதவள நடைமுறைகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். நிறுவனம் தனது ஊழியர்களை அதன் வெற்றிக்கு அடிப்படையாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளின் இதயமாகவும் கருதுகிறது. சிறந்த பணியாளர் ஊக்கம் மற்றும் ஈடுபாட்டிற்காக இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இம்மாநாட்டில் உரையாற்றினர். பல தொழில்துறை முன்னோடிகளும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துக்களையும், நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒரு கலந்துரையாடல் அமர்வின் போது, இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் இயக்குநர் (பணியாளர்) திரு கே.கே.சிங், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் புதுமையான மனிதவள நடைமுறைகள் குறித்தும், சமகால 'போட்டி நிறைந்த வணிகச் சூழலில்' நெகிழ்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில் மனிதவளத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
----
TS/IR/KPG/DL
(Release ID: 2067162)
Visitor Counter : 44