அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வழிகாட்டுதல், தொலைதொடர்பு, விமான சேவைகளுக்குப் பயன்படக்கூடிய மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் தயாரித்தல்
Posted On:
22 OCT 2024 3:43PM by PIB Chennai
குளிர்ந்த ரிட்பெர்க் அணுக்களைக்கொண்டு ஆராய்ச்சிப்பணி மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் குழு, குவாண்டம் மேக்னடோமெட்ரியைப் பயன்படுத்தி வழிசெலுத்துதல், தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் துல்லியமான நேரத்தைக் கடைபிடிக்கப் பயன்படுத்தப்படும் அணு கடிகாரங்கள் மற்றும் காந்தமானிகளுக்கு மேலும் அதிகமான அளவில் துல்லியத்தை அடையவும், அவற்றை கூடுதலாக வலுவானதாக மாற்றவும் உதவியுள்ளது.
ரிட்பெர்க் அணு என்பது மிக உயர்ந்த முதன்மை குவாண்டம் எண் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்மங்களைக் கொண்ட தூண்டல் அணுவாகும். மின்காந்தவியல் தூண்டப்பட்ட ஒளி ஊடுறுவுதன்மை எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் முறை மூலம் இந்த தூண்டல் நிலைஅளவிடப்படுகிறது.
ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஆர்.ஆர்.ஐ) ஆராய்ச்சியாளர்கள் டாப்ளர் விளைவை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, அறை வெப்பநிலை அடிப்படையிலான சூழலில் ரிட்பெர்க் மின்காந்தவியல் தூண்டப்பட்ட ஒளி ஊடுறுவுதன்மையைப்(ஈஐடி) பயன்படுத்தி வெப்ப ருபீடியம் அணுக்களில் குவாண்டம் மேக்னடோமெட்ரி (காந்தப்புலங்களின் துல்லியமான அளவீட்டிற்கான ஒளி மற்றும் அணுக்களின் குவாண்டம் தன்மையைப் பயன்படுத்தும் நிகழ்வு) செய்யும் போது காந்தப்புலத்திற்கு பத்து மடங்கு மேம்பட்ட நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
மின்காந்தவியல் தூண்டப்பட்ட ஒளி ஊடுறுவுதன்மைஎன்பது ஒரு கண்கவர் நிகழ்வாகும், இது ஒரு ஒளிபுகா ஊடகத்தை ஒளிபுகு ஊடகமாக ஆக்குகிறது. துல்லியமான அணு கடிகாரங்கள், அணு காந்தமானிகள் மற்றும் குவாண்டம் கணக்கீடு ஆகியவற்றில் எண்ணற்ற முக்கியமான பயன்பாடுகளுக்கு வழிவகுத்தது. ஈஐடி பொதுவாக மூன்று நிலை அணு அமைப்பில் இரண்டு அணு மாற்றங்களை உள்ளடக்கியது.
விஞ்ஞான ரீதியாக, ஒரு அலை பல பாதைகள் வழியாக இரண்டு புள்ளிகளுக்கு இடையில் பயணிக்க முடிந்தால் குறுக்கீடு ஏற்படுகிறது, இதன் விளைவாக அது அதிகரிக்கப்படுகிறது அல்லது ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு அணு குறுக்கிடக்கூடிய வெவ்வேறு வழிகளில் பல குவாண்டமாக்கப்பட்ட ஆற்றல் மட்டங்களுக்கு இடையில் மாற முடியும். இது ஒரு அணு ஈர்த்துக் கொள்ளும் ஒளியின் அளவை தீர்மானிக்கிறது.
ஆக்கக் குறுக்கீடு பொலிவுப் பட்டைகளையும் அழிவுக் குறுக்கீடு இருண்ட பட்டைகளையும் தரும் ஒளிக் குறுக்கீட்டைப் போலவே, இந்த ஆற்றல் மட்டங்களுக்கு இடையிலான அணு மாற்றங்களின் நிகழ்தகவுகளும் அழிவுகரமாகக் குறுக்கிடலாம், இது குவாண்டம் குறுக்கீடு என அறியப்படுகிறது. இதன் விளைவாக அணுக்கள் ஆய்வு ஒளியை ஈர்க்காமல் இருண்ட நிலையில் இருக்கும், இதனால் அணு ஊடகம் ஒளிபுகும் தன்மை கொண்டதாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067034
----
TS/PKV/KV/DL
(Release ID: 2067119)
Visitor Counter : 49