நிலக்கரி அமைச்சகம்
நட்சத்திரத் தரவரிசை வழங்கும் விழா, சுரங்கம் தோண்டுவோர், செயல்படுத்துவோர் குறித்த பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் நிலக்கரி விவரப் புத்தகம் வெளியீடு ஆகியவற்றை நிலக்கரி அமைச்சகம் 2024, அக்டோபர் 21 அன்று நடத்துகிறது
Posted On:
20 OCT 2024 3:40PM by PIB Chennai
நட்சத்திரத் தரவரிசை வழங்கும் விழா, சுரங்கம் தோண்டுவோர், செயல்படுத்துவோர் குறித்த பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் நிலக்கரி விவரப் புத்தகம் வெளியீடு ஆகியவற்றை புதுதில்லியில் உள்ள லோதி வளாகத்தின் லோதி மையத்தில் நிலக்கரி அமைச்சகம் 2024, அக்டோபர் 21 அன்று நடத்துகிறது. இந்த நிகழ்வுகள் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் செயல்திறனை அங்கீகரிப்பது, முக்கிய பங்குதாரர்களுடன் ஈடுபாட்டை வளர்ப்பது, நிலக்கரி துறையில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும் இத்துறையின் இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.
நட்சத்திரத் தரவரிசை விருதுகள் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கின்றன. பொறுப்பான சுரங்க நடைமுறைகளை மேம்படுத்துதல், தொழில் தரத்தை மேம்படுத்துதல், இத்துறையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. சுரங்க செயல்பாடுகள், சுற்றுச்சூழல் காரணிகள், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது-சிறந்த சுரங்க நடைமுறைகள், பொருளாதார செயல்திறன், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், தொழிலாளர் தொடர்பான இணக்கம், பாதுகாப்பு ஆகிய ஏழு முக்கிய விஷயங்களில் சுரங்கங்களை மதிப்பிடும் ஒரு விரிவான நட்சத்திர மதிப்பீட்டு பொறிமுறையை அமைச்சகம் நிறுவியுள்ளது.
ஒவ்வொரு சுரங்கத்தின் செயல்திறனின் முழுமையான மதிப்பீட்டு அடிப்படையில் ஐந்து நட்சத்திரம் முதல் நோ ஸ்டார் வரையிலான நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இது நிலத்தடி சுரங்கங்கள், திறந்தவெளி சுரங்கங்கள், கலப்பு சுரங்கங்கள் என மூன்று வகை சுரங்கங்களை உள்ளடக்கியது:. 2022-23-ம் ஆண்டில், நட்சத்திர மதிப்பீடு விருதில் மொத்தம் 380 சுரங்கங்கள் பங்கேற்றுள்ளன. 43 சுரங்கங்கள் மதிப்புமிக்க ஐந்து நட்சத்திர மதிப்பீட்டிற்குத் தகுதி பெற்றுள்ளன, மேலும் 91% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இதில், 4 சுரங்கங்கள் முதல் இடத்தையும், 2 சுரங்கங்கள் 2-வது இடத்தையும், 6 சுரங்கங்கள் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த ஆண்டு கலப்பு பிரிவின் கீழ் எந்த சுரங்கமும் தகுதி பெறவில்லை.
இந்த நிகழ்வில் சுரங்க அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி விருதுகள் வழங்கப்படும். நிலக்கரி அமைச்சகம் வெளியிடும் இந்திய நிலக்கரி விவரப் புத்தகம், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி யின் உற்பத்தி, துறைசார் விநியோகங்கள், நிலக்கரி தொழில்துறையின் மற்ற முக்கிய அம்சங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் விரிவான களஞ்சியமாகும். கூடுதலாக, நிகழ்வின் போது தூய்மை விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள், தூய்மை இந்தியா பணியுடன் இணைந்து, நிலக்கரித் தொழிலில் தூய்மை மற்றும் நிலைத்தன்மையின் உயர் தரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
*************
SMB/KV
(Release ID: 2066526)
Visitor Counter : 59