எஃகுத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேச மாநில சுரங்க நிறுவனத்துடன் எம்.ஓ.ஐ.எல் வரைவு கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
19 OCT 2024 7:07PM by PIB Chennai
போபாலில் உள்ள மத்தியப் பிரதேச சுரங்க மாநாட்டில், மத்தியப் பிரதேச மாநில சுரங்க நிறுவனத்துடன் (எம்.பி.எஸ்.எம்.சி.எல்) எம்.ஓ.ஐ.எல் ஒரு வரைவு கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாங்கனீசு தாது சுரங்கத்தை மேம்படுத்துவதையும், மதிப்பு கூட்டும் திட்டங்களை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், முதன்மைச் செயலாளர் திரு சஞ்சய் சுக்லா, எம்.ஓ.ஐ.எல் நிர்வாக இயக்குநர் திரு அஜித் குமார் சக்சேனா, இயக்குநர் (உற்பத்தி மற்றும் திட்டமிடல்) திரு எம்.எம்.அப்துல்லா மற்றும் இதர பிரமுகர்கள் முன்னிலையில் இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒப்பந்தத்தின்படி, எம்.ஓ.ஐ.எல்-இல் 51% மற்றும் எம்.பி.எஸ்.எம்.சி.எல்-இல் 49% பங்குகளுடன் எம்.ஓ.ஐ.எல் மற்றும் எம்.பி.எஸ்.எம்.சி.எல் இடையே ஒரு கூட்டு முயற்சி நிறுவனம் உருவாக்கப்படும். எம்.ஓ.ஐ.எல் மற்றும் எம்.பி.எஸ்.எம்.சி.எல் இடையேயான இந்த உத்திசார் கூட்டாண்மை, மத்தியப் பிரதேசத்தில் வளமான மாங்கனீசு தாது இருப்புக்களைப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, பிராந்தியத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தற்சார்பு இந்தியாவின் பார்வையுடன் ஒத்துப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
******************
BR/KV
(Release ID: 2066462)
Visitor Counter : 37