பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ல் மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் பங்கேற்றன

Posted On: 18 OCT 2024 4:35PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0, தூய்மை இயக்கங்களை நிறுவனமயமாக்குதல், நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைத்தல் என்ற குறிக்கோள்களை நிறைவுசெய்யும் அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு இயக்கம் 4.0-க்கான ஆயத்த கட்டம் (16-30 செப்டம்பர், 2024) 2024, செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தது. செயல்படுத்தல் கட்டம் 2024,  அக்டோபர் 2 அன்று தொடங்கியது.

தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பங்கேற்ற ஆறாவது கூட்டத்தில், இந்த இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளரால் 2024, அக்டோபர் 18 அன்று ஆய்வு  செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 84 அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த 187 மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைச்சகங்கள் / துறைகளின் அலுவலகங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றன. இயக்கத்தின் நடுவில் 3.19 லட்சம் இடங்கள் என்ற இலக்கில், 2.30 லட்சம் அலுவலக இடங்களில் (72%) தூய்மை செய்யப்பட்டுள்ளன. 63.48 லட்சம் சதுர அடி இடம் பணிப் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளது; பழைய பொருட்கள் விற்பனை மூலம் ரூ.53.61 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2.95 லட்சம் மக்கள் குறைகளுக்குத்  தீர்வு காணப்பட்டுள்ளது.

சிறப்பு இயக்கம் 4.0-ன் நடுவில், 2024, அக்டோபர் 18 நிலவரப்படி, பின்வரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது:

.எண்

செயல்பாடு

சிறப்பு இயக்கம் 4.0 இலக்கு

18, அக். 2024 வரை சாதனை

18, அக். 2024 வரை நிறைவேற்றப்பட்ட இலக்கு %

1

துய்மை இயக்கங்கள்

3,19,223

2,30,189

72%

2

எம்.பி.-க்களின் குறிப்புகள்

 

4,139

1,173

28%

3

நாடாளுமன்ற உறுதிமொழிகள்

1,157

106

9%

4

ஐஎம்சி குறிப்புகள்

146

75

51%

5

மாநில அரசு குறிப்புகள்

749

374

50%

6

பொதுமக்கள் குறைகள்

5,17,672

2,95,115

57%

7

பொதுமக்கள் குறைகள் மேல்முறையீடு 

15,841

7,063

45%

8

பிரதமர் அலுவலகக் குறிப்புகள்

972

570

59%

9

விதிகள்/நடைமுறைகளை எளிதாக்குதல்

635

308

49%

10

ஆய்வுக்கான நிலுவை நேரடிக் கோப்புகள்

33,10,775

19,07,229

58%

11

ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்னணுக் கோப்புகள்

4,99,981

2,15,383

43%

12

விடுவிக்கப்பட்ட இடம் (சதுர அடி)

63.48 லட்சம்

 

 

13

ஈட்டப்பட்ட வருவாய் (ரூபாயில்)

53.61 கோடி

 

 

சிறப்பு இயக்கம் 4.0 -ல் #SpecialCampaign அமைச்சகங்கள் / துறைகளின் 7,587 ட்வீட்கள், 406 இன்போ கிராபிக்ஸ், 32 மில்லியன் சென்றடைதல்  மற்றும் 183 பிஐபி அறிக்கைகள் வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.

***

SMB/DL


(Release ID: 2066176) Visitor Counter : 33


Read this release in: Hindi , English , Urdu