பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் ஷர்துல் துபாயில் துறைமுக பயணத்தை நிறைவு செய்தது
Posted On:
18 OCT 2024 5:29PM by PIB Chennai
ஐஎன்எஸ் ஷர்துல் கப்பல் நீண்ட தூரப் பயிற்சியின் ஒரு பகுதியாக 16 அக்டோபர் 24 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இந்தப் பயணம் அமைந்தது. துறைமுக அழைப்பின் போது, ஐக்கிய அரபு அமீரக கடற்படையுடனான தொடர்புகள், பயிற்சிகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய ஈடுபாடுகளில் அடங்கும்.
ஐஎன்எஸ் ஷர்துலின் கடல் பயிற்சியாளர்கள், கடற்படை அதிகாரிகள் பயிற்சி அகாடமி மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைக் கப்பலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர், இது தொழில்முறை தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட பயிற்சி நடைமுறைகள் பற்றிய விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. கூட்டுப் பயிற்சி அமர்வுகள், யோகா நடவடிக்கைகள் மற்றும் நட்புரீதியான விளையாட்டுகள் ஆகியவை பயணத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். ஐஎன்எஸ் ஷர்துல் கப்பலுக்கு வருகை தந்த அமீரக கடற்படையின் அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
துபாயில் இருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் ஷர்துல் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படைக் கப்பலான அல் குவைசாட் உடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் பங்கேற்றது. இரண்டு கப்பல்களும் தொடர்ச்சியான கடற்படை வியூகங்கள், தகவல் தொடர்பு பயிற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த இயக்கங்களை மேற்கொண்டன.
இந்திய கடற்படைக் கப்பலின் துபாய் பயணம், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல்சார் உறவுகளின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது.
***
PKV/AG/DL
(Release ID: 2066175)
Visitor Counter : 45