ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பெண் தொழில் முனைவோர்களுக்கான தேசிய மாநாடு
Posted On:
18 OCT 2024 3:07PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தீன் தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் தொழில் முனைவோருக்கான தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங், வங்கிகளுக்கான விருதுகளை வழங்கினார். கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், வங்கிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டார்.
இத்துறையின் இணைச் செயலாளர் திருமதி ஸ்மிருதி சரண் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பெண் தொழில் முனைவோருக்கு வங்கி கடனுதவி பெற்றுத் தரும் விதமாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய திரு சைலேஷ் குமார் சிங், பெண்கள் மிகுந்த இரக்கம், உறுதிப்பாடு, நேர்மை, வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன் அவர்கள் விரும்பும் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066041
***
MM/KPG/RR
(Release ID: 2066090)
Visitor Counter : 67