ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பத்து வங்கிகளுடன் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 18 OCT 2024 3:05PM by PIB Chennai

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஒன்பது பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை இந்த வங்கிகளாகும்.

 

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிப்பதற்காக இந்த வங்கிகள் குறிப்பிட்ட திட்டங்களை வடிவமைத்துள்ளன. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்கள் பெண்கள் தங்கள் நிறுவனங்களை அளவிடுவதற்கு பெரிய அளவிலான கடன்களைப் பெற உதவும். பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தபடி லட்சாதிபதி சகோதரியை உருவாக்கும் இலக்கை அடைவதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை மேம்படுத்தப்பட்ட சொத்துக்களைக் கொண்டு கிராமப்புறங்களில் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நிதியளிக்க வங்கிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் அறிவுறுத்தினார். இம்முயற்சி ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பினை வழங்குவதுடன், ஏராளமான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இதில் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், வங்கிகள் தங்கள் கிளை அதிகாரிகளுக்கு தாங்கள் வடிவமைத்த குறிப்பிட்ட திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனால் கிராமப்புற பெண்கள் கிளை அளவில் நிதி பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வங்கித் தொடர்பு திட்டம் உருவானவுடன் சுய உதவிக் குழுக்கள் அபரிமிதமாக வளர்ந்துள்ளன. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் ரூ.9.5 கோடிக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளன.

***

(Release ID: 2066039)

PKV/AG/RR



(Release ID: 2066088) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi